Friday, December 9, 2011

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி II (Ahmadabad)

அட என்ன சம்பவம்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் பெருசா இல்ல , கொல்கத்தால இருக்குற டிராம் சர்வீஸ் மாதிரி இங்கயும் இருக்கு அட மம்மா ஊருக்கும் இங்கயும் ஒரு சின்ன வித்தியாசம், அது என்னன்னா பஸ் போறதுக்கு மட்டும் தனியா நடுவுல ஒரு ரோடு போட்டு வச்ருகாங்க, இந்த முறைக்கு என்ன பேருன்னு ஆட்டோகாரர்ட கேட்டேன். BRTS அப்டின்னு சொன்னாரு, அப்டினா என்னான்னு கேட்டதுக்கு ஏதோ கேட்ட வார்த்தை பேசுன மாதிரி முறைக்கிறார். பய புள்ளைகளுக்கு இங்கிலீஷ் தெரியாது. அப்புறம் வந்து விசாரிச்சா பஸ் ராபிட் ட்ரான்ஸ்ட்  சிஸ்டம் (பஸ் RAPID TRANSIT SYSTEM ). உங்களோட பார்வைக்கு போட்டோ கிழ இருக்கு பாத்துகோங்க.
அப்டியே மறுபடியும் நடந்து வந்தா பசி கொல்லுது, ஹோட்டல் மேனேஜர்ட்ட எங்கயாவது சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கானு கேட்டேன், அவரு பக்கதுல இருக்குனு சொன்னார் , அவர்ட  வழி கேட்டு போனா பயபுள்ள ஸ்டார் ஹோட்டல சொல்லிருக்கு, இங்க போனா நம்ம டப்பா டான்ஸ் ஆடிரும்னு முடிவு பண்ணி பக்கதுல நோட்டம் விட்டா ரோட்ல ஒருத்தன் சூப்பரா தோசை போட்டுகிட்டு இருந்தான் சரின்னு ஒரு மசால் தோச போட சொன்னேன், (பொசுக்குனு டோக்கன் வாங்க சொல்லிட்டான், படி துறை பாண்டியவே டோக்கன் வாங்க சொல்றியானு அவன முறைக்கவா முடியும்). டோக்கன் வாங்கி கொண்டு போய் குடுத்தா அவன் ஒரு நம்பர் சொல்லி 10  நிமிஷம் கழிச்சி வர சொன்னான், இதெல்லாம் தாண்டி கஷ்டப்பட்டு  அந்த தோசைய சாப்டாச்சு. பாருங்க சொல்லவந்தத விட்டுட்டு வேற என்னலாமோ சொல்லிட்டு இருக்கேன்.



அதாவது குஜராத் மக்கள் நம்ம சாப்டுற தோச, இட்லிக்கு உயிரை விடுறாங்க, ரோட்டு கடைன்னு நினைச்சு சாப்டேன் பார்த்தா சூப்பர் டேஸ்ட், மக்கள் அலை மோதுறாங்க, சரி ரோட்டு கடைதான தோச என்ன ஒரு 20  ரூபா இருக்கும்னு நினைச்சா, ஒரு மசாலா தோச 80 ரூபா. என்ன கொடும சார் இது??? ஆனால் அந்த தோசைக்கு எவளவு வேணும்னாலும் குடுக்கலாம்.

சரின்னு மனச தேத்தி மறுபடியும் ஹோட்டலுக்கு நடந்து வந்துகிட்டு இருக்கும் போது தீடிர்னு ஒரு கடைல பயங்கர கூட்டம் என்னனு விசாரிச்சா சோடா கடை, இங்க நைட் சோடா இல்லாட்டி மோர் குடிக்கமா மக்கள் தூங்குறது இல்ல, அந்த அளவுக்கு சோடா மேல ஒரு வெறியா இருகாங்க, குறிப்பா வயது வந்த பசங்க பொண்ணுங்க மேலும் இவங்க பால், மோர், தயிர் இதே மாதிரி பொருளையும் அட்ஜஸ்ட் பன்றது இல்ல. பால்,மோர் இல்லாம இவங்க நாள் அர்ம்பிகறது இல்ல.




ஒரு வழியா அந்த சோடா கடைக்கும் போய் சோடா வாங்கி ஒரு கல்ப் அட்ச்சிட்டு வந்தாச்சு, என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் காளி மார்க் சோடா மாதிரி இல்ல. இப்படியா ஹோட்டல் ரூமுக்கு வர 10 மணி
ஆயிருச்சு, ஊற சுத்தி பாக்குற அவசரத்துல போனே ரூம்ல விட்டுட்டு போய்டேன். போன எடுத்து பார்த்த 12 மிஸ்டு கால், இங்க வந்து செர்ததுல இருந்து வீட்டுக்கு போனே பண்ணலேன்றது அப்பதான் நியாபகம் வந்தது உடனே இன்டெர்வியுல நடந்த விசயதல்லாம் அப்பாட்ட சொல்லிட்டு போன வைக்க மணி பத்தரைய தாண்டி இருந்தது.



சரின்னு அதி காலை 3 மணிக்கு அலாரம் வச்சிட்டு தூங்க போறதுக்கு மணி 11 ஆயிருச்சு. அப்டி இப்டின்னு புரண்டு பார்த்தாலும் தூக்கம் வரல, காலைல வேற சீக்கரம் கிளம்பி போகணும் அந்த டெண்சன்ல சுத்தமா தூக்கம் வரல, எப்டியோ கஷ்டப்பட்டு ஒரு வழியா ஒரு 12  மணிக்கு தூங்கிருபேன், அப்பதான் படுத்த மாதிரு இருந்தது  அதுகுள்ள அலாரம் பேய் மாதிரி கத்த ஆரம்பிச்சது. ஒரு பத்து தடவ ச்னுஸ் பட்டன அமுக்கி அமுக்கி என்திகிரதுகுள்ள மணி 3 .30 தாண்டிருச்சு, சரின்னு அடிச்சு புடுச்சு எந்திரிச்சு ஜன்னல திறந்தா நான் கண்ட காட்சி என்னை தூக்கி வாரி போட்டது...................


தொடரும்
Udanz

3 comments:

வெளங்காதவன்™ said...

வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்....

:-)

#யோவ் மொத கமெண்டு போட்டு இருக்கேன்... முடிஞ்சா ஒரு குவாட்டர் சொல்லேன்..
:)

Ruthra said...

பாஸ் குவாட்டர் என்ன???? புல் சொல்லிருவோம் .

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்

நேசமுடன்
ருத்ரா

Astrologer sathishkumar Erode said...

அஹமதாபாத் போய் இட்லி தோசை சாப்டுறது தமிழன் மட்டும்தான்யா..

Post a Comment