Monday, December 19, 2011

எங்கே இருக்கிறார் சசிகலா?

என் அன்பு பதிவுலக நண்பர்களே, தமிழ் நாடே நீண்ட நாட்களாக எதிர் பார்த்தது எதிர் பார்க்காமல் இன்று நிறை வெறி இருக்கிறது, ஆம் சசிகலா மற்றும் அவரது உறவுகள் சுருக்கமாக மன்னார்குடி மாபியா என்று செல்லமாக அழைக்கப்படும் சசிகலா கும்பல் இன்று அதிமுக கட்சியை விட்டு அடித்து விரட்டபட்டு உள்ளனர்.

கருணாநிதிக்கு எப்படி அழகிரி, ஸ்டாலின்,கனிமொழி,தயாநிதி,கலாநிதி எப்படியோ அதுபோல தான் ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி கும்பல், ஜெயலலிதா முதன் முதலில் ஆட்சி கட்டிலில் ஏறியது முதல் இந்த கும்பல் தனி ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டது.


சரி இந்த கும்பலில் யார் யார் உள்ளார்கள் என்று பார்போம்.M.நடராஜன் ,M.ராமசந்திரன், திவாகரன்,சுதாகரன், S.வெங்கடேஷ், MIDAS மோகன், இராவணன் , குலோத்துங்கன்  மற்றும்  ராஜராஜன்.சரி சசிகலா ஜெயலலிதா உடன் பிறவா சகோதிரியானது எப்படின்னு உங்களுக்கு எல்லாம் ஒரு டவுட் இருக்கும் சிலருக்கு அந்த கதை தெரிஞ்சிருக்கும் சிலருக்கு அது தெரியாம இருக்கலாம் தெரியாதவங்களுக்காக ஒரு சின்ன பிளாஷ் பாக் ஒட்டலாம். ஏறக்குறைய 19 ஆண்டுகளுக்கு  மேலாக (1982 முதல் ) ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா இருந்து வந்துள்ளார், ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையிலும் சசிகலாவை ஜெயலலிதா விட்டு கொடுக்கவில்லை,கட்சியின் முக்கிய மாற்றங்கள் அனைத்தும்  சசிகலாவை தாண்டிய ஜெக்கு செல்ல முடியும் மற்றும் அவரை சுற்றியுள்ள சசிகலா குடும்பத்தினர் கையில் அ.தி.மு.கவும் சென்று விட்டது.சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இப்போது ஜனதா தளம் சுப்ரமணிய சுவாமியுடன் இருக்கும் சந்திரலேகா, அவர் பழைய தென் ஆற்காட்டு மாவட்ட ஆட்சி தலைவராக இறுக்கும் பொது அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சசிகலாவின் கணவர் சசிகலாவை சன்றலேகாவுக்கு அறிமுகம் செய்து வைக்க அது நாளடைவில் நட்பு பலமாகி சந்திரலேகா சசியை அப்போது அதிமுக கொள்கை பரப்பு செயலராக இருந்த ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அப்போது வேதா இல்லத்தில் தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு விடியோ காசட் கொண்டு வருபவராக அறியப்பட்ட சசி, நாளடைவில் அதாவது எம்ஜியாரின் மறைவுக்கு பின் ஜெயாவின் உற்ற உதவியாளராக/தோழியாக இருந்தார்.ஜெயா ஆட்சி அரியணையில் அமர்ந்த பிறகு ஜெயாவின் உடன் பிறவா தோழியாக மாறிவிட்டார்.

சசியின் கும்பலை மன்னார்குடி மாபியா என்று பொதுவாக சொன்னாலும், சசி பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருதுறைபூண்டி,அங்குதான் அவர் பிறந்து எட்டாம் வகுப்பு வரை பயின்று உள்ளார், அவரது குடும்பம் திருதுறைபூண்டியில் மருந்து கடை ஒன்றும் வைத்திருந்தது, அவருக்கு சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு அண்ணனும் தம்பிகளும் உண்டு. சசி எட்டாம் வகுப்பு முடித்ததும் அவரது குடும்பம் மன்னார் குடிக்கு இடம் பெயர்ந்தது.

சமீப காலங்களாக  கழக ரத்தத்தின் ரத்தங்கள் சசியை சின்னம்மா என்று அழைத்து வந்தார்கள். அப்படி பட்ட சசிகலத்தான் இன்று ஜெயவினால் விரட்டப்ட்டு உள்ளார். இதற்கு முன்பு 1997ஆம் வருடம் ஜெயா எனக்கும் சசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொத்து குவிப்பு மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் இருந்த பொது அறிக்கை வெளியிட்டு  பரபரப்பு ஏற்படுத்தினர், ஆனால் 11 மாதங்களுக்குள் மீண்டும் சசிகலாவும்  ஒன்று  சேர்ந்து விட்டனர் என்பது தனி கதை.

இவ்வாறான நட்பில் விரிசல் ஏற்பட என்ன காரணம் என்று விசாரித்ததில் எப்போதையும் (1991 -1996 ,2001 -2006) விட இந்த முறை ஆட்சியிலும் அதிகராதிலும் சசியின் தொந்தரவு மிக அதிகமானது என்று சிலரும் கட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியது மற்றுமோர் காரணம் என்றும் சொல்லபடுகிறது. எடுத்துகாட்டாக பொன் மாணிக்க வேல் மற்றும் பன்னிர் செல்வம் போஸ்டிங் விவகாரமும் முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

இதை விட முக்கிய காரணம் ஜெயாலலிதாவுக்கு எதிராக பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, இதில் ஜெயாவுக்கு பாதகமான தீர்ப்பை கோர்ட் வழங்கினால் சசியின் கணவர் அல்லது உறவினர்களை முதல்வராக ஆகும் திட்டத்தை முன்வைத்து சசி காய்களை நகர்த்தியது ஜெயா காதுகளுக்கு போனதால் வந்த வினை என்றும் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கை இழுத்தடிக்க நடத்தும் நாடகமாக கூட இது இருக்கலாம் என்றும் மேலும் இதன் பின்னணியில் சோ இருக்கலாம் என்றும்  அரசியல் மற்றும் பத்திரிகை வட்டாரங்களில் கிசிகிசுகபடுகிறது.

மேலும் இதை முன்கூட்டிய அறிந்த சசிகலா அவரது உடைமைகளை எடுத்து கொண்டு இரண்டு ஸ்கார்பியோ கார்களில் வேதா இல்லத்தை விட்டு வெளியேறியதாக சில தகவல்கள் சொல்லபடுகிறது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை.

மேலும் பல அதிமுகவின் உண்மை விசுவாசிகள் கட்சியை விட்டு சென்றதற்கு காரணம் சசிகலாவும் அவரது கும்பலும் என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் இப்போது சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி இருப்பதாலும் அதிமுக ஆளுங் கட்சியாக இருப்பதாலும் பல ரத்தத்தின் ரத்தங்கள், உண்மை விசுவாசிகள் மீண்டும் ஜெயா அழைக்கும் பட்சத்தில் கட்சியில் சேரலாம்.

எது எப்படியோ கழக ரத்தத்தின் ரத்தங்கள் சசிகலாவின் நீக்கத்தை மொட்டை அடித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டடி உள்ளனர் இது ஜெயா நடத்தும் நாடகமா அல்லது சனி பகவான் நடத்தும் நாடகமா??? பொறுத்து இருந்து பார்போம்.தமிழகத்துக்கு நல்லது நடந்தா சரி??????


கஷ்டப்பட்டு டைப் பண்ணிட்டேன், பொசுக்குனு அந்த அம்மா தேர்தல் அப்ப வேட்பாளர் லிஸ்ட் விட்டுட்டு எனக்கு தெரியாம வந்துருச்சுன்னு மறுபடியும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு குழப்பம் பண்ண மாதிரி இப்ப பண்ணிற போறாங்க.


நேசமுடன்,

ருத்ரா

கடைசியில் வந்த தகவல்: இதுவரை 12 பேரை கட்சியில் நீக்கி உள்ளார்கள், அடுத்து வந்த லிஸ்டில் இன்னும் ரெண்டு பேரை நீக்கி உள்ளார்கள் ஜெயாலலிதா.அவர்கள் மகாதேவன் மற்றும் தங்க மணி.Udanz

Friday, December 16, 2011

சச்சினுக்கு பாரத் ரத்னா?


அட உண்மைதானுங்க, நேத்து நம்ம பிரதமர் அலுவலகம்,விளையாட்டுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் அனுப்புன கோரிக்கையை ஏற்று இனிமே விளையாட்டு துறைல சாதிச்சவங்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கலாம்னு முடிவு பண்ணி அறிவிச்ருகாங்க. இதனால நம்ம சச்சினுக்கு இனிமே பாரத் ரத்னா விருது கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கு.


இதுக்கு முன்னால கலை,அறிவியல்,இலக்கியம், சமுக சேவை இது போன்ற பிரிவுகளில் தான் இந்த விருது குடுப்பாங்க,இதுனால சச்சினுக்கு பாரத் ரத்னா கிடைக்குமானு ஒரு சந்தேகம் இருந்தது,மேலும் மகாராஷ்டிரா சட்ட சபைல சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கணும்னு தீர்மானம் நிறைவேற்றி இருந்தாங்க, இன்னும் நிறைய பேர் சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கணும்னு வலியுறுத்தி வந்தாங்க,சில இனைய தளங்களும் இதே கோரிக்கையை முன் வச்சி போராடிகிட்டு இருகாங்க, இந்த கோரிக்கையை ஏற்று தான், பிரதமர் அலுவலகம் பழைய பிரிவுகளோட விளையாட்டு துறையும் சேர்த்து அறிவிச்ருகாங்க, நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரமும், விளையட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் பரித்துரையின் பெயரிலேயே இந்த அறிவிப்பு வந்துருக்கு,


1954 இல் இருந்து இந்த விருது இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது, இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது இது,முதன் முதலா இந்த விருத வாங்குனது மூன்று பேர் அவங்க யாருன்னா திரு.சந்திரசேகர வெங்கட ராமன், திரு.சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மற்றும் திரு.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இதை வாங்குன வெளி நாட்டை சேர்த்தவர்கள் திரு.கான் அப்துல் கபார் கான் மற்றும்  திரு.நெல்சன் மண்டேலா, அப்புறம் வெளி நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற  அன்னை தெரசா. கடைசியாக இந்த விருது திரு.பண்டிட் பீம்சென் ஜோஷி (2009) அவர்களுக்கு வழங்கப்பட்டது.நேசமுடன்
ருத்ரா
Udanz

Wednesday, December 14, 2011

சந்தோஷ தருணங்கள்

இந்த பதிவிற்கு செல்வதற்கு முன், மீண்டும் ஒரு நன்றி அறிவிப்பு,  (ஏம்பா எத்தன தடவ???) கொஞ்சம் பொறுத்தருள்க. என்னுடைய முந்தைய பதிவுகளை படித்து விட்டு பால்ய நண்பர்கள் முதல் முகம் தெரியா முக நூல் மற்றும் பதிவுலக நண்பர்கள் வரை  பாராட்டும் மழையில் நனைந்து கொண்டுள்ளேன். பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் என்னுடைய பதிவுகளை நான் மீண்டும் மீண்டும் படிக்கும் பொது பல எழுத்து பிழைகளும், கருத்து பிழைகளும் கவனிக்கிறேன், அதை தாங்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி வைத்து விட்டு என்னை பாராட்டினாலும் கொஞ்சம் என் பிழைகளை திருத்தவும் செய்யுங்கள்.

இது எனது முதல் சந்தோஷ தருணம். இதெல்லாம் சொல்லலாமா வேண்டாமானு ஒரு மூனு நாலா ஒரே குழப்பம், சரி சொல்லிடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன விஷயம்னா. என்னுடைய அப்பா அம்மாக்கு கடந்த 11 . 12 . 2011 அன்று  25 ஆவது திருமண ஆண்டு அதாங்க வெள்ளி விழா. இதற்காக கடந்த ஒரு வருசமா என்ன பண்ணலாம்னு மண்டைய போட்டு ஒடைச்சி அப்டி பண்ணலாமா இப்டி பண்ணலாமான்னு எல்லாம் யோசிச்சி கடைசியா அந்த நாளும் வந்துருச்சி, சரி எதாவது பண்ணி ஆகணும, சரி நம்ம நேர்ல பொய் எதாவது பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபீஸ்ல லீவ் கேக்க போன எனக்கு முன்னால என்னோட பாஸ் லீவ் போட்டு தம்பி நான் ஒரு மூனு நாள் லீவ் நீ கொஞ்சம் பார்த்துகோ அப்டினு சொல்லிட்டு அவரு பாட்டு போய்ட்டாரு. இது என்னடா இப்டி ஆயிருச்சு இதுக்கா ஒரு வருஷமா பிளான் பண்ணணு என்ன நானே நொந்து கிட்டேன்,

சரி ரூம் போய் நிதானமா யோசிக்கலாம்னு முடிவு பண்ணி ரூம் போய்டு இருக்கும் பொது ஒரு போன் என்னோட தம்பி, என்னடானு கேட்ட காலேஜ்ல இருந்து இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன் ஒரு வரம் ஸ்டடி லீவ் டானு சொன்னா, அப்பதான் அந்த ஐடியா வந்துது, சரி டா அப்பா அம்மாக்கு வர சண்டே வெட்டிங் டே  அன்னைக்கு என்ன பண்ணலாம்னு கேட்டேன் அவன் டக்குனு நீ ரொம்ப பெருசா யோசிக்காத,அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நல்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னான், சரி எதுக்கும் என்னோட தங்கச்சிட்ட கேக்கலாம்னு முடிவு பண்ணி அவட்ட கேட்டதுக்கும் அவளும் நல்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னா, சரி தம்பி , தங்கை எவ்வழியோ யாமும் அவ்வழி,மறுபடியும் என்னுடைய தம்பிக்கு போன் பண்ணி, டேய் உன்னோட அக்கௌன்ட்ல பணம் போடுறேன் அப்பா அம்மாக்கு நல்ல ஒரு பட்டு சேலையும் அப்பாக்கு ஒரு காட்டன் வெட்டி சட்டையும் எடுன்னு சொல்லி அமௌண்ட போட்டு விட்டேன்.

நம்ம தம்பி பேஷன் டெக் படிக்கிறார், அதுனால கொஞ்சம் டிரஸ் நல்ல எடுப்பார், பல நேரத்துல அவன் கூடதான் நான் எனக்கு டிரஸ் எடுக்க போவேன்.தம்பியும் ஊருக்கு போய் நல்ல ஒரு பட்டு சேலையும், காட்டன் வெட்டி சடையும் எடுத்து கிப்ட் பார்சல் பண்ணி அவனோட நண்பர் வீட்ல வச்சிட்டு வந்துட்டார், நானும் அப்பாடி ஒரு வழியா வேல முடிஞ்சிதுன்னு சந்தோசமா இருந்தேன், அப்டி நினைச்சிட்டு இருக்கும் போதே தம்பிட்ட இருந்து கால் (என்ன ஒரு டெலிபதி) அண்ணா இன்னைக்கு நான் உடனே காலேஜ் கிளம்புறேன் ஒரு பிரக்டிகல் நோட் பெண்டிங் இருக்கு அது நான் சிக்ன் வாங்க போறேன்னு சொள்லிட்டு கிளம்பிட்டான்.

அட இது என்ன டா புது சோதனை. சரின்னு அவனோட பிரண்ட் நம்பர் வங்கி அந்த கிப்ட் பார்சல எங்க பக்கத்து  வீட்டு மாமாட குடுக்க சொல்லி, அவர்ட நடந்த கதைய விளாவரியா சொல்லி, மாமா இத தயவு செய்து எங்க அப்பா அம்மாட்ட சண்டே மறக்காம குடுதுருங்கனு சொல்லி அவரும் சரின்னு சொல்லிட்டார். ஒரு வழியா எல்லாம் சரின்னு ஞாயிற்று கிழமைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

ஒரு வழியா ஞாயிற்று கிழமை அன்னிக்கு அந்த மாமா கலைலையே கிப்ட் குடுத்துட்டு போன் பண்ணி, தம்பி கிப்ட்டஅப்பா அம்மாட்ட குடுத்துட்டேன், சந்தொசமான்னு கேட்டார்...நானும் ரொம்ப தேங்க்ஸ் மாமானு  சொல்லிட்டு, என்னோட தம்பியையும் ,தங்கையும் கான்பாரன்ஸ் கால்ல எடுத்து எங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணி வாழ்த்துகள சொன்னோம். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப சந்தோசம் எங்களுக்கும் தான், இந்த சந்தோசத்த உங்க கூடயும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மீண்டும் மகிழ்ச்சி.


இது இரண்டாவது சந்தோசம், பாரதியார் பிறந்த நாள், அன்றுதான் என்னுடைய அப்பா அம்மாவின் திருமண நாளும், எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு கவிஞர் பாரதியார் மட்டுமே. குறிப்பாக நான் மேல் நிலை முதல் ஆண்டு தேர்விற்கு முந்தைய தினம் கடுமையான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தேன், அப்போது உற்ற துணையாக இருந்தது பாரதியாரின் கவிதை வரிகளே,  காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் என்ற வரிகளை மனதில் நினைத்து அத்தனை தேர்வுக்கும் சென்று வந்தேன்,வென்றும் வந்தேன், ஆதலால் பாரதியாரின் பிறந்த நாள் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள்.
எனக்கு மிகவும் பிடித்த மற்றுமோர் கவிதை  உங்களுக்காக
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?இது மூன்றாவது சந்தோசம், வேற யாருங்க நம்ம தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான்,இங்க குஜராத்ல அனைத்து FM சானலும் ரஜினி பத்தி அலறுதுங்க அவரு பிறந்த நாளுக்காக, நான் வாழ்த்து சொல்லலேனா எப்படி??? மேலும் எனக்கு பிரபலங்களை பிடிப்பது அவர்களுடைய வாழ்வு முறைகளை பொறுத்தே, அந்த வகையில்  எனக்கு மிகவும் பிடித்தவர்கள் ரஜினி, அஜித் , சச்சின், கவுண்ட மணி, கங்குலி அதில் ஒருவர் திரு.ரஜினிகாந்த் அவர்கள். ரஜினியை பற்றி நிறைய பேருக்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் எனக்கு தலைவர ரொம்ப பிடிக்கும், நான் பார்த்த முதல் திரைபடம் தளபதி அதுனால கூட தலைவர பிடிக்கலாமோ என்னவோ??. என்ன இருந்தாலும்
தலைவர் தலைவர் தான். தலைவா பிறந்த நாள் வாழ்த்துக்கள். லேட்டா சொன்னாலும் கொஞ்சம் லேட்டஸ்ட் பாஸ்.
நேசமுடன்,
ருத்ரா


Udanz

Tuesday, December 13, 2011

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி III (Ahmadabad)


அப்பிடி என்ன பார்த்தேன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியுது, வேற ஒன்னும் பெருசா பாக்கல, காலைல 4 மணிக்கு பொண்ணுங்க ஒரு குருப்பா சுத்திக்கிட்டு இருகாங்க, காந்தி பிறந்த மாநிலம் சொல்லவா வேணும்னு மனசுல நினைச்சுகிட்டேன்.

சரி நம்ம இப்டியே பார்த்துகிட்டு இருந்தம்னா டங்கு வார் அந்துரும்னு சட்டு புட்டுனு கிளம்பலாம்னு, கிளம்பி ஹோட்டல் செக் அவுட் பண்ணிட்டு ஆட்டோக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன், சார் ஆட்டோ வரதுக்கு ஒரு 20 நிமிஷம் ஆகும்னு சொன்னதுனால கொஞ்சம் அப்டியே வாக் போய்டு வரலாம்னு சொல்லி கிளம்புனேன்.

கொஞ்சம் தூரம் போனவுடன் அங்க பார்த்த மக்கள் வரிசையா மாட்டுக்கு புல் கட்டு வாங்கி குடுத்துகிட்டு இருந்தாங்க, இது என்னனு விசாரிக்கலாம்னு பக்கதுல போறதுக்குள்ள ஹோட்டெல இருந்து கால், சார் சீக்கிரம் வாங்க ஆட்டோ வந்துருச்சுன்னு, சரி நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்னு வந்துட்டேன்.
 
வந்து ஆட்டோல ஏறி ஏர்போர்ட் போங்கனு பழக்க தோசத்துல தமிழ்ல சொன்னேனேன், அவரு திரும்பி தம்பி தமிழான்னு கேட்டாரு, அப்பாடி ஒரு தமிழன குஜராத்ல பார்த்துட்டோம் டான்னு மனசுல நினைச்சுகிட்டு, அவர பத்தி கேட்டேன், அவரு இங்க வந்து 18 வருஷம் ஆயிட்டு அப்டின்னு சொன்னாரு,அவர்ட அகமதாபாத் பத்தி ஒவொன்ன கேக்க ஆரம்பிச்சேன்.

அவர் ஒவொன்ன சொல்ல சொல்ல எனக்கு ஒவ்வொன்னும் ஆச்சரியமாக இருந்தது. முதல நான் அவர்ட கேட்டது இந்த பொண்ணுக காலைல சுத்திகிட்டு இருந்தத பத்தி, அதற்கு அவர் சொன்னது இங்க பொண்ணுகளுக்கு சேப்டி கொஞ்சம் அதிகம் அதுனால அவங்க ப்ரீயா சுத்திகிட்டு இருபங்க அப்டினாறு.

அடுத்து நான் கேட்ட கேள்வி, மாடுகளுக்கு புல் குடுக்கறத பத்தி, அதுக்கு அவர் என்னா சொன்னார்ன குஜராத்திகள் கொஞ்சம் தானம் தர்மத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்னு அவரு மேல சொன்னது என்னன்னா மாடுகளுக்கு மட்டும் இல்ல புறா,நாய், ஏன் நம்ம கட்ட எறும்பு கூட விட்டு வைக்கமா காலைல வாக் போகும்போது சாப்பாடு போட்டு வருவாங்க. அதுக்காக எவளவு வேணும்னாலும் செலவு பண்ணுவானுக அப்டின்னு சொன்னாரு.

அது மட்டும் இல்லாம ஏர் போர்ட் போற வழில எறும்புக்கு அரிசி மாவு போடுறத காட்னார். நம்ம ஊர்ல அரிசி மாவு கோலத்த இப்படி மாத்தி பண்றாங்கன்னு நினச்சுகிட்டேன். சரி நல்ல விஷயம் எப்டி பன்னா என்னா ?

இதே மாதிரி நிறைய வித்தியாசமான விஷயங்கள் அகமதாபாத்ல இருக்கு, இன்னும் சொல்லனும்னா எல்லார் வீட்லயும் ஒரு கார் இருக்கு, கார் வாங்க முடியாதவங்க பைக்க ஆல்டர் பண்ணி யூஸ் பண்றாங்க. சாம்பிள் படம் போட்ருக்கேன் பார்த்து ஆல்டர் பண்ணிகொங்க.
 ஒரு வழியா ஏர் போர்ட் வந்து சேர்ந்து செக் இன் பண்ணி  போர்டிங் பாஸ் வாங்கி ப்ளைட்ல உக்காந்து ஒவ்வரு ஏர் ஹோஷ்டர்சா பாத்து முடிகதுகுள்ள உடனே ஒரு போன் வேற யாரு என்னோட பாசமிகு தந்தை என்னஆச்சு ஏர்போர்ட் வந்திடியானு கேட்டாரு, நான் எல்லாம் வந்து ப்ளைட்ல ஏறி பிளைட் கிளம்பபோது அப்டின்னு சொல்ல்றதுகுள்ள ஏர் ஹோஷ்டர் ஓடி வந்து சார் போன சுவிட்ச் ஆப் பண்ணுங்கனு தொல்லை, சரி ஒரு வழியா போன சுவிட்ச் ஆப் பண்ணி அவனுக குடுத்த பிரேக் பாஸ்ட சாப்டு முடிகரதுகுள்ள மும்பை வந்துருச்சு.


மும்பைல இறங்கி நெக்ஸ்ட் பிளைட் பிடிக்க அடிச்சி பிடிச்சி போய் செக்யூரிட்டி செக் பண்ணிட்டு இருக்கும் பொது தொடர்து போன் கால் வந்துகிட்டே இருக்கு. சரின்னு அந்த கால கட் பண்ணி விட்டுட்டு ப்ளைட்ல ஏறி மறுபடியும் போன் பண்ணி யாருன்னு கேட்டா??? நம்ம இன்டர்வியு அட்டென்ட் பண்ணிட்டு வந்ருந்த கம்பனில இருந்து HR  கால் பண்ணி நீங்க செலக்ட் ஆயிடீங்க மத்த விஷயமல மெயில் பண்றேன்னு சொன்னார்.

இப்டியான இனிமையான நினைவுகளோடு இருக்கும் பொது விமானம் பெங்களூரில் தரை இறங்கியது.....


முற்றும்

நேசமுடன்
ருத்ராUdanz

Friday, December 9, 2011

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி II (Ahmadabad)

அட என்ன சம்பவம்னு கேக்குறீங்களா வேற ஒன்னும் பெருசா இல்ல , கொல்கத்தால இருக்குற டிராம் சர்வீஸ் மாதிரி இங்கயும் இருக்கு அட மம்மா ஊருக்கும் இங்கயும் ஒரு சின்ன வித்தியாசம், அது என்னன்னா பஸ் போறதுக்கு மட்டும் தனியா நடுவுல ஒரு ரோடு போட்டு வச்ருகாங்க, இந்த முறைக்கு என்ன பேருன்னு ஆட்டோகாரர்ட கேட்டேன். BRTS அப்டின்னு சொன்னாரு, அப்டினா என்னான்னு கேட்டதுக்கு ஏதோ கேட்ட வார்த்தை பேசுன மாதிரி முறைக்கிறார். பய புள்ளைகளுக்கு இங்கிலீஷ் தெரியாது. அப்புறம் வந்து விசாரிச்சா பஸ் ராபிட் ட்ரான்ஸ்ட்  சிஸ்டம் (பஸ் RAPID TRANSIT SYSTEM ). உங்களோட பார்வைக்கு போட்டோ கிழ இருக்கு பாத்துகோங்க.
அப்டியே மறுபடியும் நடந்து வந்தா பசி கொல்லுது, ஹோட்டல் மேனேஜர்ட்ட எங்கயாவது சவுத் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கானு கேட்டேன், அவரு பக்கதுல இருக்குனு சொன்னார் , அவர்ட  வழி கேட்டு போனா பயபுள்ள ஸ்டார் ஹோட்டல சொல்லிருக்கு, இங்க போனா நம்ம டப்பா டான்ஸ் ஆடிரும்னு முடிவு பண்ணி பக்கதுல நோட்டம் விட்டா ரோட்ல ஒருத்தன் சூப்பரா தோசை போட்டுகிட்டு இருந்தான் சரின்னு ஒரு மசால் தோச போட சொன்னேன், (பொசுக்குனு டோக்கன் வாங்க சொல்லிட்டான், படி துறை பாண்டியவே டோக்கன் வாங்க சொல்றியானு அவன முறைக்கவா முடியும்). டோக்கன் வாங்கி கொண்டு போய் குடுத்தா அவன் ஒரு நம்பர் சொல்லி 10  நிமிஷம் கழிச்சி வர சொன்னான், இதெல்லாம் தாண்டி கஷ்டப்பட்டு  அந்த தோசைய சாப்டாச்சு. பாருங்க சொல்லவந்தத விட்டுட்டு வேற என்னலாமோ சொல்லிட்டு இருக்கேன்.அதாவது குஜராத் மக்கள் நம்ம சாப்டுற தோச, இட்லிக்கு உயிரை விடுறாங்க, ரோட்டு கடைன்னு நினைச்சு சாப்டேன் பார்த்தா சூப்பர் டேஸ்ட், மக்கள் அலை மோதுறாங்க, சரி ரோட்டு கடைதான தோச என்ன ஒரு 20  ரூபா இருக்கும்னு நினைச்சா, ஒரு மசாலா தோச 80 ரூபா. என்ன கொடும சார் இது??? ஆனால் அந்த தோசைக்கு எவளவு வேணும்னாலும் குடுக்கலாம்.

சரின்னு மனச தேத்தி மறுபடியும் ஹோட்டலுக்கு நடந்து வந்துகிட்டு இருக்கும் போது தீடிர்னு ஒரு கடைல பயங்கர கூட்டம் என்னனு விசாரிச்சா சோடா கடை, இங்க நைட் சோடா இல்லாட்டி மோர் குடிக்கமா மக்கள் தூங்குறது இல்ல, அந்த அளவுக்கு சோடா மேல ஒரு வெறியா இருகாங்க, குறிப்பா வயது வந்த பசங்க பொண்ணுங்க மேலும் இவங்க பால், மோர், தயிர் இதே மாதிரி பொருளையும் அட்ஜஸ்ட் பன்றது இல்ல. பால்,மோர் இல்லாம இவங்க நாள் அர்ம்பிகறது இல்ல.
ஒரு வழியா அந்த சோடா கடைக்கும் போய் சோடா வாங்கி ஒரு கல்ப் அட்ச்சிட்டு வந்தாச்சு, என்னதான் இருந்தாலும் நம்ம ஊர் காளி மார்க் சோடா மாதிரி இல்ல. இப்படியா ஹோட்டல் ரூமுக்கு வர 10 மணி
ஆயிருச்சு, ஊற சுத்தி பாக்குற அவசரத்துல போனே ரூம்ல விட்டுட்டு போய்டேன். போன எடுத்து பார்த்த 12 மிஸ்டு கால், இங்க வந்து செர்ததுல இருந்து வீட்டுக்கு போனே பண்ணலேன்றது அப்பதான் நியாபகம் வந்தது உடனே இன்டெர்வியுல நடந்த விசயதல்லாம் அப்பாட்ட சொல்லிட்டு போன வைக்க மணி பத்தரைய தாண்டி இருந்தது.சரின்னு அதி காலை 3 மணிக்கு அலாரம் வச்சிட்டு தூங்க போறதுக்கு மணி 11 ஆயிருச்சு. அப்டி இப்டின்னு புரண்டு பார்த்தாலும் தூக்கம் வரல, காலைல வேற சீக்கரம் கிளம்பி போகணும் அந்த டெண்சன்ல சுத்தமா தூக்கம் வரல, எப்டியோ கஷ்டப்பட்டு ஒரு வழியா ஒரு 12  மணிக்கு தூங்கிருபேன், அப்பதான் படுத்த மாதிரு இருந்தது  அதுகுள்ள அலாரம் பேய் மாதிரி கத்த ஆரம்பிச்சது. ஒரு பத்து தடவ ச்னுஸ் பட்டன அமுக்கி அமுக்கி என்திகிரதுகுள்ள மணி 3 .30 தாண்டிருச்சு, சரின்னு அடிச்சு புடுச்சு எந்திரிச்சு ஜன்னல திறந்தா நான் கண்ட காட்சி என்னை தூக்கி வாரி போட்டது...................


தொடரும்
Udanz

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம்


 

 ஏற்கனவே நான் உங்கட்ட என்னோட முந்தய பதிவுல சொன்ன மாதிரி பயண கட்டுரைகள ஆரம்பிக்க போறேன், அதுக்கு முன்னால நேற்று நான் போட்ட பதிவுல ஒருத்தருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் அவர் பெயர் நல்ல நேரம் சதீஷ்குமார் ஜோதிடம் மேலும் என்னுடைய நண்பன் விஸ்வநாதன் அவர்கட்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அவரும் ஒரு வலை பூ வைத்துள்ளார். அவரது வலை பூவிற்கு செல்ல அவரது பெயரை கிளிக் செய்யவும்.
அஹ்மதாபாத் இப்போது எனக்கு சோறு போடும் ஊர், இங்கதாங்க நான்  குப்ப கொட்டிகிட்டு இருக்கேன். முதன் முறையாக அஹ்மதாபாத்கு நேர்முக தேர்வுக்கு வரும் போது (நான் எதாவது புது ஊருக்கு அதுவும் மொழி தெரியாத ஊருக்கு போன என்னோட வயுத்துல, பயத்துல பட்டாம்பூச்சி பறக்கும்) ஒரு விதமான பயத்துடனே வந்தேன். இதற்க்கு முன்னால் வருடா வருடம் பரோடா வந்துள்ள போதும் அஹ்மதாபாத் இதுவே முதல் முறை மேலும் நம்ம பழைய கம்பெனில உள்ளவன் எவனாவது பார்த்து என்னோட மேனேஜர்ட்ட பத்த வச்ருவனோன்ற பயமும் சேர்ந்துகிச்சு.
 ரயில்வே ஸ்டேஷன்ல இறங்குன உடனே நம்ம இந்தியாவுக்கே உரித்தான சார் ஆட்டோ, சார் டாக்ஸி குரல்கள் ஒலிக்க தொடங்கியது, எப்போதும் நான் ஸ்டேஷன்ல ஆட்டோ எடுக்குறது இல்ல, ஸ்டேஷன் வெளிய போய் எடுக்கறது தான் வழக்கம், அப்பதான் ஒரு 50 % கம்மியா இருக்கும் ஆட்டோ, டாக்ஸின்னு வந்தவங்களுக்கு நஹி சாயியே அப்டின்னு நமக்கு தெரிந்த ஹிந்தி வார்த்தைய எடுத்து விட்டு வெளிய ஒரு பெட்டி கடைக்கு வந்து ஒரு காபிய போட்டுட்டு ஒரு ஆட்டோகாரற பிடிச்சி போக வேண்டிய இடத்த சொன்னேன், மவராசன் மீட்டர் போட்டு 100 ரூபா வாங்கிட்டான். ஸ்டேஷன் உள்ள சொன்னது 180 ரூபா.

ஹோட்டலுக்கு வந்து பிரெஷ் ஆயிட்டு இன்டெர்வியு முடிஞ்சி வெளிய வரதுக்கு சாய்ந்திரம் ஆயிருச்சு, மேலும் எனக்கு அடுத்த நாள் அதிகாலை பெங்களுருக்கு விமானம் இருந்ததாலும் வெளிய போய் அதிகமா சுத்தி பாக்க முடியல. ஆனாலும் நம்ம விடுவமா கொஞ்சமா அப்டியே நடந்து போயிட்டு வருவோம்னு ஹோட்டல்ல இருந்து இறங்கி வெளிய வந்து நடக்க ஆரம்பிச்சேன்.

காலைல இன்டர்வியு பரபரப்புல இருந்ததால சிட்டிய நல்லா பாக்க முடியல இப்பதான் நிதானமா ஒவ் ஒன்னா கவனிக்க ஆரம்பிச்சேன்.இந்த ஊர் கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு அப்டின்னு முடிவு பண்ணது அந்த சம்பவத்த பார்த்த அப்புறம் தான்.

தொடரும் 

நேசமுடன்

ருத்ரா 

பின் குறிப்பு : தோழர்களே இதே நடையில் தொடரவா இல்லை வேறு மாற்றம் வேண்டுமா?? உங்கள் கருத்துக்களை அறிய ஆவாலாக உள்ளேன்.

Udanz

Thursday, December 8, 2011

இந்தியால இருந்து ஜப்பான் வரை

 நேத்து கஷ்டப்பட்டு ஒரு பதிவ போட்டு அதுக்கு எதுவும் கமெண்ட்ஸ் நேத்து நைட் வர வரல. சரி நம்ம அரசியல் கட்டுரை எழுதுறது யாருக்கும் பிடிக்கல, வேற எதாவது வித்தியாசமா பதிவு போடலாம்னு நேத்து நைட் வரை யோசிச்சி யோசிச்சி ஒன்னும் புடி படல. கடைசியா நமக்கு தெரிஞ்ச மற்றும் நம்ம செஞ்ச பயணங்களை பத்தி ஒரு பதிவ போட்டு விடுவோம்னு முடிவு பண்ணப்போ மணி டங்குன்னு ஒன்னு அடிக்குது, சரி இதுக்கு மேல லேப்டாப்ப ஓபன் பண்ண விடுஞ்சிரும்.அதுனால நாளைக்கு பதிவ போடலாம்னு முடிவு பண்ணி தூங்கிட்டேன்.

எனக்கு தெரிஞ்சவரை தமிழ்ல பயணங்கள் பற்றி இதுவரை யாரும் அதிகமா எழுதலன்னு நினைக்கிறன். அப்படி எதாவது கட்டுரைகள் இருந்த தோழர்கள் லிங்க் குடுங்க. சரி இனிமே என்னோட பதிவுகள் பயணங்கள் பத்தி அதிகமிருக்கும்.

காலைல ஆபீஸ் வந்திட்டு இருக்கும் பொது மொபைல் அலறுனுது. என்னமோ ஏதோனு பார்த்த சரக்குக்கு சாவு மணி கட்டுரைக்கு ஒரு கமெண்ட் வந்துருக்குனு ஒரு மெயில் , உடனே நமக்கு அந்த கம்மெண்ட பார்த்து ஆகணுமே, ஆட்டோ டிரைவர கொஞ்சம் வேகமா போக சொன்னேன்.

ஆபீஸ் வந்ததும் அடிச்சி பிடிச்சி சிஸ்டம ஓபன் பண்ணா நம்ம தோழர் ராஜா கமெண்ட் போட்டுருந்தார், ஓகே ஒரு கமெண்ட் வந்துருச்சு அதுக்கு reply  பண்ணிட்டு எப்படி பயண கட்டுரைய ஆரம்பிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அப்பா நம்ம கை சும்மா இருக்கமா switch to new blogger அப்டின்னு ஒரு லிங்க் இருந்துது அத சரியாய் குட படிக்காம கிளிக் பண்ணி தொலச்சிட்டேன். அது என்னனமோ காட்டுது. ஒன்னு ஒன்னா பாத்துட்டு வரும்போது stats அப்டின்னு ஒரு லிங்க் இருந்துது, அதையும் கிளிக் பண்ணேன், அத பார்த்து அப்டியே நான் ஷாக் ஆயிட்டேன்.

என்ன ஷாக்னா, நம்ம பதிவ கிட்ட தட்ட ஒரு 300  தடவ view  பண்ணிருகாங்க (படிச்சதுக்கு அப்புறம் ஏன்டா வந்தோம்னு நினைச்சு இருப்பாங்க ) நம்ம மகா ஜனங்கள். இதற்கு காரணமான அனைத்து நல் உள்ளங்களையும் முக்கியமாக அன்பழகன் வீரப்பன், சரவணன் சவடமுத்து , ராஜா , M .R , வேடந்தாங்கல், இன்டலி , பிரபாகரன் ஆகியோர்ட்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 தோழர்கள் அன்பழகன் வீரப்பன் மற்றும்  சரவணன் சவடமுத்து அவர்களை கொஞ்சம் கஷ்டபடுதிவிட்டேன் அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுடைய முக புத்தகத்தில் நம்முடைய சரக்குக்கு சாவு மணி லிங்கை பகிர்ந்தவுடன் தான்  இந்தியா முதல் ஜப்பான் வரை, ipad ல இருந்து விண்டோஸ் மூலம் மக்கள் சாரா சாராய வந்து பார்த்துட்டு போயிருகாங்க. 


இத பார்த்ததும் பயமும் பதற்றமாவும் இருக்கு, இனிமே கொஞ்சம் நல்லா எழுதணும் இல்ல இல்ல நிறையவே நல்லா எழுதனும்னு தோணுது, இது போல என்றும் உங்கள் தொடர் ஆதரவை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.


 
இதுக்கு மேல ஒரு பயங்கர ஷாக் என்னன்னா, இந்த சந்தோசத்துல திக்கு முக்காடிகிட்டு இருக்கும் பொது திடீர்னு ப்ளோக்க ஓபன் பண்ணா followers  ஜீரோ அப்டின்னு காமிக்குது, இது என்ன டா பேஜாரா போச்சு, இந்த ஆண்டவன் கொஞ்சம் கூட ஒரு மனுசன நிம்மதியா இருக்க விட மாற்றான். பின்ன என்னங்க  கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒரு 14 followers பிக் அப் பண்ணி  வச்சுருந்தேன், இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.

மேலும் நண்பர்கட்கு இது எதாவது தொழில் நுட்ப கொளராக இருந்தால் இதை எப்படி சரி செய்வது என்று கொஞ்சம் விளக்கவும் ஏன் என்றால் மறுபடியும் நண்பர்களிடம் போய் follow பண்ணுங்க join பண்ணுங்க அப்டின்னு சொல்றதுக்கு வெட்கமா இருக்கு.

நேசமுடன்
ருத்ரா
Udanz