Friday, December 9, 2011

அஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம்


 

 ஏற்கனவே நான் உங்கட்ட என்னோட முந்தய பதிவுல சொன்ன மாதிரி பயண கட்டுரைகள ஆரம்பிக்க போறேன், அதுக்கு முன்னால நேற்று நான் போட்ட பதிவுல ஒருத்தருக்கு நன்றி சொல்ல மறந்துட்டேன் அவர் பெயர் நல்ல நேரம் சதீஷ்குமார் ஜோதிடம் மேலும் என்னுடைய நண்பன் விஸ்வநாதன் அவர்கட்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் அவரும் ஒரு வலை பூ வைத்துள்ளார். அவரது வலை பூவிற்கு செல்ல அவரது பெயரை கிளிக் செய்யவும்.
அஹ்மதாபாத் இப்போது எனக்கு சோறு போடும் ஊர், இங்கதாங்க நான்  குப்ப கொட்டிகிட்டு இருக்கேன். முதன் முறையாக அஹ்மதாபாத்கு நேர்முக தேர்வுக்கு வரும் போது (நான் எதாவது புது ஊருக்கு அதுவும் மொழி தெரியாத ஊருக்கு போன என்னோட வயுத்துல, பயத்துல பட்டாம்பூச்சி பறக்கும்) ஒரு விதமான பயத்துடனே வந்தேன். இதற்க்கு முன்னால் வருடா வருடம் பரோடா வந்துள்ள போதும் அஹ்மதாபாத் இதுவே முதல் முறை மேலும் நம்ம பழைய கம்பெனில உள்ளவன் எவனாவது பார்த்து என்னோட மேனேஜர்ட்ட பத்த வச்ருவனோன்ற பயமும் சேர்ந்துகிச்சு.
 ரயில்வே ஸ்டேஷன்ல இறங்குன உடனே நம்ம இந்தியாவுக்கே உரித்தான சார் ஆட்டோ, சார் டாக்ஸி குரல்கள் ஒலிக்க தொடங்கியது, எப்போதும் நான் ஸ்டேஷன்ல ஆட்டோ எடுக்குறது இல்ல, ஸ்டேஷன் வெளிய போய் எடுக்கறது தான் வழக்கம், அப்பதான் ஒரு 50 % கம்மியா இருக்கும் ஆட்டோ, டாக்ஸின்னு வந்தவங்களுக்கு நஹி சாயியே அப்டின்னு நமக்கு தெரிந்த ஹிந்தி வார்த்தைய எடுத்து விட்டு வெளிய ஒரு பெட்டி கடைக்கு வந்து ஒரு காபிய போட்டுட்டு ஒரு ஆட்டோகாரற பிடிச்சி போக வேண்டிய இடத்த சொன்னேன், மவராசன் மீட்டர் போட்டு 100 ரூபா வாங்கிட்டான். ஸ்டேஷன் உள்ள சொன்னது 180 ரூபா.

ஹோட்டலுக்கு வந்து பிரெஷ் ஆயிட்டு இன்டெர்வியு முடிஞ்சி வெளிய வரதுக்கு சாய்ந்திரம் ஆயிருச்சு, மேலும் எனக்கு அடுத்த நாள் அதிகாலை பெங்களுருக்கு விமானம் இருந்ததாலும் வெளிய போய் அதிகமா சுத்தி பாக்க முடியல. ஆனாலும் நம்ம விடுவமா கொஞ்சமா அப்டியே நடந்து போயிட்டு வருவோம்னு ஹோட்டல்ல இருந்து இறங்கி வெளிய வந்து நடக்க ஆரம்பிச்சேன்.

காலைல இன்டர்வியு பரபரப்புல இருந்ததால சிட்டிய நல்லா பாக்க முடியல இப்பதான் நிதானமா ஒவ் ஒன்னா கவனிக்க ஆரம்பிச்சேன்.இந்த ஊர் கொஞ்சம் வித்தியாசமாதான் இருக்கு அப்டின்னு முடிவு பண்ணது அந்த சம்பவத்த பார்த்த அப்புறம் தான்.

தொடரும் 

நேசமுடன்

ருத்ரா 

பின் குறிப்பு : தோழர்களே இதே நடையில் தொடரவா இல்லை வேறு மாற்றம் வேண்டுமா?? உங்கள் கருத்துக்களை அறிய ஆவாலாக உள்ளேன்.

Udanz

4 comments:

viswanathanchidambareswaran said...

நல்லா வந்துருக்கு அப்படியா தொடரு...

ராஜ் said...

பாஸ்,
நல்லா எழுதுறிங்க....இப்படியே தொடருங்க.....கதைய பாதியிலேயே நிறுத்திட்டேங்க.....????? என்ன சம்பவத்தை பார்த்திங்க.....???

Astrologer sathishkumar Erode said...

நன்றிக்கு நன்றி...இப்படித்தான் எழுதணும்.இன்னும் இரண்டு பேரா எழுதியிருக்கலாம்....இந்த தொடர் பெரிய வெற்றி தரும்...’’அஹமதாபாத் பயண அனுபவங்கள்’’அஹமதாபாத் சிலிர்ப்பான அனுபவங்கள்,,,என தலைப்பு வையுங்கள்..பாகம் 2,3,4 என தொடரலாம்...தலைப்பில் அஹமதாபாத் என்பதை ஆங்கிலத்திலும் குறிப்பிடுங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வாய்ப்புண்டு!

Ruthra said...

raj & sathis sir,

பகுதி இரண்டு எழுதுருகேன் படியுங்க

Post a Comment