Monday, December 5, 2011

சுய புராணம்

என் உடன் பிறவா சகோதர சகோதரிகளே, அனைவர்க்கும் என் அன்பு கலந்த வணக்கங்கள், நீங்க என்ன சொல்ல போறீங்கனு எனக்கு நல்லா புரியுது இருக்குறவங்க தொல்லையே தாங்க முடியல இதுல நீ வேறயானு சொல்லறீங்க. அட பாவம் சின்ன பையன் எழுதிட்டு போறேன் கொஞ்சம் மன்னிச்சு விட்ருங்க ,அப்படி என்ன வித்தியாசமா எழுத போறேன்னு கேக்குறீங்களா அட வித்தியாசமா ஒன்னும் எழுத மாட்டேன் எல்லாரும் மாதிரி தான் எழுத போறேன் கொஞ்சம் சமூகம், கொஞ்சம் அரசியல், கொஞ்சம் சினிமா, கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் கதை, கொஞ்சம் கவிதை,எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் ஆனா நிறைய சுய புராணம் இருக்கும். என்னோட சுய புராணத மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகொங்க தலைவர்களா...

இப்ப என்னை பற்றி, நானும் எல்லோரையும் மாதிரி அப்பா படிக்க சொன்னார்னு Engineering படிச்சு முடிச்சுட்டேன்.ஒரு வழியா வேலையும் கிடைச்சி இப்ப ஒரு நல்ல வேலைல இருக்கேன்.(இருந்தாலும் விதி யாரா விட்டது.ப்ளாக் எழுத வந்திட்டியே )...நம்ம வேலை Technical மார்க்கெட்டிங் அதுனால ஊர் ஊரா சுத்திக்கிட்டு இருக்கேன் ஒரு வழியா பாதி இந்தியாவ கரைச்சி குடுச்சிட்டேன்.இப்போ நம்ம குஜராத் ல இருக்கேன்.ஒவ்வரு ஊர்லயும் வித விதமா மனுசங்கள பார்க்க வேண்டி இருந்தது.ஒவ்வரு ஊர்லயும் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைச்சது.இத எல்லாம் என்கிட்ட மட்டும் இருந்த போதுமா உங்களுக்கும் தெரிய வேண்டாமா??? அதுனாலத்தான் நானே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ணி எல்லோர்க்கும் நம்ம அனுபவத்த (அலபறைய) பகிர்வோமனு ஒரு நல்ல எண்ணம். கொஞ்சம் ஓவரா இருக்கோ???? சரி விடுங்க... இன்றில் இருந்து என்னுடைய மொக்கை இனிதே ஆரம்பம்.
தங்களுடைய வாழ்த்துகளை வேண்டி,
ருத்ரா.


பின் குறிப்பு: இது என்னுடைய கன்னி கட்டுரை என்பதால் எழுத்து பிழைகளை பொறுத்தருள்க.
Udanz

6 comments:

ராஜ் said...

பாஸ்,
நானும் கிட்டத்தட்ட உங்களை மாதிரி தான்...2005 to 2007 வரைக்கும் இரண்டு வருடங்கள் தனியாக பல ஊர் சுத்தினேன்...பூராவும் வட மாநிலங்கள் தான்...நிறைய அனுபவங்கள்....ஆனால் எதையும் ஆவணபடுத்த வில்லை.....நீங்கள் உங்கள் நல்ல/கெட்ட அனுபவங்களை ஆவணபடுதுங்கள்...

Ruthra said...

பாஸ்,
நானும் கிட்டத்தட்ட உங்களை மாதிரி தான்...2005 to 2007 வரைக்கும் இரண்டு வருடங்கள் தனியாக பல ஊர் சுத்தினேன்...பூராவும் வட மாநிலங்கள் தான்...நிறைய அனுபவங்கள்....ஆனால் எதையும் ஆவணபடுத்த வில்லை.....நீங்கள் உங்கள் நல்ல/கெட்ட அனுபவங்களை ஆவணபடுதுங்கள்... ////

நானும் ரொம்ப நாலா யோசிச்சிட்டு இர்ந்துடேன், இப்ப எழுதுரதனு முடிவு பண்ணிட்டேன்,.தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை...

ருத்ரா

Philosophy Prabhakaran said...

வாங்க ருத்ரா... வலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

மற்ற புதுப் பதிவர்களைப் போல ஒன்றிரண்டு பதிவுகளோடு தொலைந்து போகாமல் நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன்...

நெருப்பு மாதிரி வேலை செய்யணும்... தியாகம் தான் உன்னை உயர்த்தும்...

Ruthra said...

Philosophy Prabhakaran said...வாங்க ருத்ரா... வலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...மற்ற புதுப் பதிவர்களைப் போல ஒன்றிரண்டு பதிவுகளோடு தொலைந்து போகாமல் நிலைத்து நிற்க வாழ்த்துகிறேன்...நெருப்பு மாதிரி வேலை செய்யணும்... தியாகம் தான் உன்னை உயர்த்தும்...///////
நன்றி தலைவா, தங்கள் தொடர் ஆதரவு வேண்டுகிறேன், நான் ப்ளாக் எழுத காரணம் நீங்களும் தான்.

சமுத்ரா said...

வலைப்பூவுலகிற்கு வருக

Ruthra said...

நன்றி தோழா

நேசமுடன்
ருத்ரா

Post a Comment