Monday, December 19, 2011

எங்கே இருக்கிறார் சசிகலா?

என் அன்பு பதிவுலக நண்பர்களே, தமிழ் நாடே நீண்ட நாட்களாக எதிர் பார்த்தது எதிர் பார்க்காமல் இன்று நிறை வெறி இருக்கிறது, ஆம் சசிகலா மற்றும் அவரது உறவுகள் சுருக்கமாக மன்னார்குடி மாபியா என்று செல்லமாக அழைக்கப்படும் சசிகலா கும்பல் இன்று அதிமுக கட்சியை விட்டு அடித்து விரட்டபட்டு உள்ளனர்.

கருணாநிதிக்கு எப்படி அழகிரி, ஸ்டாலின்,கனிமொழி,தயாநிதி,கலாநிதி எப்படியோ அதுபோல தான் ஜெயலலிதாவுக்கு மன்னார்குடி கும்பல், ஜெயலலிதா முதன் முதலில் ஆட்சி கட்டிலில் ஏறியது முதல் இந்த கும்பல் தனி ஆட்சி செலுத்த ஆரம்பித்து விட்டது.


சரி இந்த கும்பலில் யார் யார் உள்ளார்கள் என்று பார்போம்.M.நடராஜன் ,M.ராமசந்திரன், திவாகரன்,சுதாகரன், S.வெங்கடேஷ், MIDAS மோகன், இராவணன் , குலோத்துங்கன்  மற்றும்  ராஜராஜன்.



சரி சசிகலா ஜெயலலிதா உடன் பிறவா சகோதிரியானது எப்படின்னு உங்களுக்கு எல்லாம் ஒரு டவுட் இருக்கும் சிலருக்கு அந்த கதை தெரிஞ்சிருக்கும் சிலருக்கு அது தெரியாம இருக்கலாம் தெரியாதவங்களுக்காக ஒரு சின்ன பிளாஷ் பாக் ஒட்டலாம். 



ஏறக்குறைய 19 ஆண்டுகளுக்கு  மேலாக (1982 முதல் ) ஜெயலலிதாவின் நிழலாக சசிகலா இருந்து வந்துள்ளார், ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு இடையிலும் சசிகலாவை ஜெயலலிதா விட்டு கொடுக்கவில்லை,கட்சியின் முக்கிய மாற்றங்கள் அனைத்தும்  சசிகலாவை தாண்டிய ஜெக்கு செல்ல முடியும் மற்றும் அவரை சுற்றியுள்ள சசிகலா குடும்பத்தினர் கையில் அ.தி.மு.கவும் சென்று விட்டது.



சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் இப்போது ஜனதா தளம் சுப்ரமணிய சுவாமியுடன் இருக்கும் சந்திரலேகா, அவர் பழைய தென் ஆற்காட்டு மாவட்ட ஆட்சி தலைவராக இறுக்கும் பொது அங்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த சசிகலாவின் கணவர் சசிகலாவை சன்றலேகாவுக்கு அறிமுகம் செய்து வைக்க அது நாளடைவில் நட்பு பலமாகி சந்திரலேகா சசியை அப்போது அதிமுக கொள்கை பரப்பு செயலராக இருந்த ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அப்போது வேதா இல்லத்தில் தனிமையில் இருந்த ஜெயலலிதாவுக்கு விடியோ காசட் கொண்டு வருபவராக அறியப்பட்ட சசி, நாளடைவில் அதாவது எம்ஜியாரின் மறைவுக்கு பின் ஜெயாவின் உற்ற உதவியாளராக/தோழியாக இருந்தார்.ஜெயா ஆட்சி அரியணையில் அமர்ந்த பிறகு ஜெயாவின் உடன் பிறவா தோழியாக மாறிவிட்டார்.

சசியின் கும்பலை மன்னார்குடி மாபியா என்று பொதுவாக சொன்னாலும், சசி பிறந்தது வளர்ந்தது எல்லாம் திருதுறைபூண்டி,அங்குதான் அவர் பிறந்து எட்டாம் வகுப்பு வரை பயின்று உள்ளார், அவரது குடும்பம் திருதுறைபூண்டியில் மருந்து கடை ஒன்றும் வைத்திருந்தது, அவருக்கு சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன்னு அண்ணனும் தம்பிகளும் உண்டு. சசி எட்டாம் வகுப்பு முடித்ததும் அவரது குடும்பம் மன்னார் குடிக்கு இடம் பெயர்ந்தது.

சமீப காலங்களாக  கழக ரத்தத்தின் ரத்தங்கள் சசியை சின்னம்மா என்று அழைத்து வந்தார்கள். அப்படி பட்ட சசிகலத்தான் இன்று ஜெயவினால் விரட்டப்ட்டு உள்ளார். இதற்கு முன்பு 1997ஆம் வருடம் ஜெயா எனக்கும் சசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொத்து குவிப்பு மற்றும் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  சிறையில் இருந்த பொது அறிக்கை வெளியிட்டு  பரபரப்பு ஏற்படுத்தினர், ஆனால் 11 மாதங்களுக்குள் மீண்டும் சசிகலாவும்  ஒன்று  சேர்ந்து விட்டனர் என்பது தனி கதை.

இவ்வாறான நட்பில் விரிசல் ஏற்பட என்ன காரணம் என்று விசாரித்ததில் எப்போதையும் (1991 -1996 ,2001 -2006) விட இந்த முறை ஆட்சியிலும் அதிகராதிலும் சசியின் தொந்தரவு மிக அதிகமானது என்று சிலரும் கட்சியை கைப்பற்ற திட்டம் தீட்டியது மற்றுமோர் காரணம் என்றும் சொல்லபடுகிறது. எடுத்துகாட்டாக பொன் மாணிக்க வேல் மற்றும் பன்னிர் செல்வம் போஸ்டிங் விவகாரமும் முக்கிய காரணமாக சொல்லபடுகிறது.

இதை விட முக்கிய காரணம் ஜெயாலலிதாவுக்கு எதிராக பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் சொத்து குவிப்பு வழக்கு, இதில் ஜெயாவுக்கு பாதகமான தீர்ப்பை கோர்ட் வழங்கினால் சசியின் கணவர் அல்லது உறவினர்களை முதல்வராக ஆகும் திட்டத்தை முன்வைத்து சசி காய்களை நகர்த்தியது ஜெயா காதுகளுக்கு போனதால் வந்த வினை என்றும் பெங்களூர் சொத்து குவிப்பு வழக்கை இழுத்தடிக்க நடத்தும் நாடகமாக கூட இது இருக்கலாம் என்றும் மேலும் இதன் பின்னணியில் சோ இருக்கலாம் என்றும்  அரசியல் மற்றும் பத்திரிகை வட்டாரங்களில் கிசிகிசுகபடுகிறது.

மேலும் இதை முன்கூட்டிய அறிந்த சசிகலா அவரது உடைமைகளை எடுத்து கொண்டு இரண்டு ஸ்கார்பியோ கார்களில் வேதா இல்லத்தை விட்டு வெளியேறியதாக சில தகவல்கள் சொல்லபடுகிறது. இப்போது அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை.

மேலும் பல அதிமுகவின் உண்மை விசுவாசிகள் கட்சியை விட்டு சென்றதற்கு காரணம் சசிகலாவும் அவரது கும்பலும் என்பதை மறுப்பதற்கு இல்லை என்றாலும் இப்போது சசிகலாவை கட்சியை விட்டு நீக்கி இருப்பதாலும் அதிமுக ஆளுங் கட்சியாக இருப்பதாலும் பல ரத்தத்தின் ரத்தங்கள், உண்மை விசுவாசிகள் மீண்டும் ஜெயா அழைக்கும் பட்சத்தில் கட்சியில் சேரலாம்.

எது எப்படியோ கழக ரத்தத்தின் ரத்தங்கள் சசிகலாவின் நீக்கத்தை மொட்டை அடித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டடி உள்ளனர் இது ஜெயா நடத்தும் நாடகமா அல்லது சனி பகவான் நடத்தும் நாடகமா??? பொறுத்து இருந்து பார்போம்.தமிழகத்துக்கு நல்லது நடந்தா சரி??????


கஷ்டப்பட்டு டைப் பண்ணிட்டேன், பொசுக்குனு அந்த அம்மா தேர்தல் அப்ப வேட்பாளர் லிஸ்ட் விட்டுட்டு எனக்கு தெரியாம வந்துருச்சுன்னு மறுபடியும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு குழப்பம் பண்ண மாதிரி இப்ப பண்ணிற போறாங்க.


நேசமுடன்,

ருத்ரா

கடைசியில் வந்த தகவல்: இதுவரை 12 பேரை கட்சியில் நீக்கி உள்ளார்கள், அடுத்து வந்த லிஸ்டில் இன்னும் ரெண்டு பேரை நீக்கி உள்ளார்கள் ஜெயாலலிதா.அவர்கள் மகாதேவன் மற்றும் தங்க மணி.











Udanz

7 comments:

வெளங்காதவன்™ said...

ஹா ஹா ஹா...
அரசியல் நாடகத்தில் இதுவும் ஒன்று...
பொறுத்திருந்து பாருங்கள்...

#யோவ்... உம்ம வயசு என்ன?

CKR - THE KONGU PUYAL said...

bro jj rocks u rocks ....

Ruthra said...

வெளங்காதவன் said...
ஹா ஹா ஹா...
அரசியல் நாடகத்தில் இதுவும் ஒன்று...
பொறுத்திருந்து பாருங்கள்...

#யோவ்... உம்ம வயசு என்ன?////////

வயசு என்னயா பெரிய வயசு 288 மாசம்தான் ஆகுது. சின்ன பையன் நான்.

வெளங்காதவன்™ said...

:-)

Bala said...

நடக்கறது என்னமோ நல்லதுக்குதான்னு மனசு சொல்லுது. பொறுத்திருந்து பார்ப்போம். என்னைக்காவது ஒரு நாள் நாட்டுக்கும் நல்லது நடக்கனும் தானே..

Ruthra said...

அன்புள்ள முகில்

நல்லது நடந்த சரிதான்.

நேசமுடன்
ருத்ரா

Suresh Subramanian said...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

Post a Comment