Friday, December 16, 2011

சச்சினுக்கு பாரத் ரத்னா?


அட உண்மைதானுங்க, நேத்து நம்ம பிரதமர் அலுவலகம்,விளையாட்டுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகம் அனுப்புன கோரிக்கையை ஏற்று இனிமே விளையாட்டு துறைல சாதிச்சவங்களுக்கும் பாரத் ரத்னா விருது வழங்கலாம்னு முடிவு பண்ணி அறிவிச்ருகாங்க. இதனால நம்ம சச்சினுக்கு இனிமே பாரத் ரத்னா விருது கிடைக்க பிரகாசமான வாய்ப்பு இருக்கு.


இதுக்கு முன்னால கலை,அறிவியல்,இலக்கியம், சமுக சேவை இது போன்ற பிரிவுகளில் தான் இந்த விருது குடுப்பாங்க,இதுனால சச்சினுக்கு பாரத் ரத்னா கிடைக்குமானு ஒரு சந்தேகம் இருந்தது,மேலும் மகாராஷ்டிரா சட்ட சபைல சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கணும்னு தீர்மானம் நிறைவேற்றி இருந்தாங்க, இன்னும் நிறைய பேர் சச்சினுக்கு பாரத் ரத்னா கொடுக்கணும்னு வலியுறுத்தி வந்தாங்க,சில இனைய தளங்களும் இதே கோரிக்கையை முன் வச்சி போராடிகிட்டு இருகாங்க, இந்த கோரிக்கையை ஏற்று தான், பிரதமர் அலுவலகம் பழைய பிரிவுகளோட விளையாட்டு துறையும் சேர்த்து அறிவிச்ருகாங்க, நம்ம உள்துறை அமைச்சர் சிதம்பரமும், விளையட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் பரித்துரையின் பெயரிலேயே இந்த அறிவிப்பு வந்துருக்கு,


1954 இல் இருந்து இந்த விருது இந்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது, இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருது இது,முதன் முதலா இந்த விருத வாங்குனது மூன்று பேர் அவங்க யாருன்னா திரு.சந்திரசேகர வெங்கட ராமன், திரு.சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மற்றும் திரு.சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இதை வாங்குன வெளி நாட்டை சேர்த்தவர்கள் திரு.கான் அப்துல் கபார் கான் மற்றும்  திரு.நெல்சன் மண்டேலா, அப்புறம் வெளி நாட்டில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்ற  அன்னை தெரசா. கடைசியாக இந்த விருது திரு.பண்டிட் பீம்சென் ஜோஷி (2009) அவர்களுக்கு வழங்கப்பட்டது.







நேசமுடன்
ருத்ரா




Udanz

2 comments:

கோகுல் said...

கொடுக்கலாம் தான் ஆனா கிரிகெட் மோகம் இன்னும் வளந்துடும் ஏற்கனவே கால்பந்து வீரர்கள் கிரிகெட் ஸ்டேடியம் சேர் துடைக்கும் அளவுக்கு இருக்காங்க ,
போற போக்கை பாத்தா இந்தியாவுல கிரிகெட் தவிர மத்த விளையாட்டுகள் நிலைமை ?????????????????

Ruthra said...

அன்புள்ள கோகுலுக்கு,

என்ன பன்றது.. இந்திய பிரிட்டிஷ் ஆட்சில இருந்ததால கிரிக்கெட் வளந்துருச்சு, இல்லாட்டி நம்மளும் சீனா மாதிரி எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் குட்துருபோமோ என்னவோ போங்க (வேர்ல்ட் கப் வாங்குன கபடி டீம் நிலமைய பாத்தீங்களா???)....இந்த நிலைமை மாறனும். எல்லா விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கிடைக்கணும்

நேசமுடன்
ருத்ரா

Post a Comment