Wednesday, December 14, 2011

சந்தோஷ தருணங்கள்

இந்த பதிவிற்கு செல்வதற்கு முன், மீண்டும் ஒரு நன்றி அறிவிப்பு,  (ஏம்பா எத்தன தடவ???) கொஞ்சம் பொறுத்தருள்க. என்னுடைய முந்தைய பதிவுகளை படித்து விட்டு பால்ய நண்பர்கள் முதல் முகம் தெரியா முக நூல் மற்றும் பதிவுலக நண்பர்கள் வரை  பாராட்டும் மழையில் நனைந்து கொண்டுள்ளேன். பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் என்னுடைய பதிவுகளை நான் மீண்டும் மீண்டும் படிக்கும் பொது பல எழுத்து பிழைகளும், கருத்து பிழைகளும் கவனிக்கிறேன், அதை தாங்கள் பெரிய மனதுடன் ஒதுக்கி வைத்து விட்டு என்னை பாராட்டினாலும் கொஞ்சம் என் பிழைகளை திருத்தவும் செய்யுங்கள்.

இது எனது முதல் சந்தோஷ தருணம். இதெல்லாம் சொல்லலாமா வேண்டாமானு ஒரு மூனு நாலா ஒரே குழப்பம், சரி சொல்லிடுவோம்னு முடிவு பண்ணிட்டேன். என்ன விஷயம்னா. என்னுடைய அப்பா அம்மாக்கு கடந்த 11 . 12 . 2011 அன்று  25 ஆவது திருமண ஆண்டு அதாங்க வெள்ளி விழா. இதற்காக கடந்த ஒரு வருசமா என்ன பண்ணலாம்னு மண்டைய போட்டு ஒடைச்சி அப்டி பண்ணலாமா இப்டி பண்ணலாமான்னு எல்லாம் யோசிச்சி கடைசியா அந்த நாளும் வந்துருச்சி, சரி எதாவது பண்ணி ஆகணும, சரி நம்ம நேர்ல பொய் எதாவது பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபீஸ்ல லீவ் கேக்க போன எனக்கு முன்னால என்னோட பாஸ் லீவ் போட்டு தம்பி நான் ஒரு மூனு நாள் லீவ் நீ கொஞ்சம் பார்த்துகோ அப்டினு சொல்லிட்டு அவரு பாட்டு போய்ட்டாரு. இது என்னடா இப்டி ஆயிருச்சு இதுக்கா ஒரு வருஷமா பிளான் பண்ணணு என்ன நானே நொந்து கிட்டேன்,

சரி ரூம் போய் நிதானமா யோசிக்கலாம்னு முடிவு பண்ணி ரூம் போய்டு இருக்கும் பொது ஒரு போன் என்னோட தம்பி, என்னடானு கேட்ட காலேஜ்ல இருந்து இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்புறேன் ஒரு வரம் ஸ்டடி லீவ் டானு சொன்னா, அப்பதான் அந்த ஐடியா வந்துது, சரி டா அப்பா அம்மாக்கு வர சண்டே வெட்டிங் டே  அன்னைக்கு என்ன பண்ணலாம்னு கேட்டேன் அவன் டக்குனு நீ ரொம்ப பெருசா யோசிக்காத,அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நல்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னான், சரி எதுக்கும் என்னோட தங்கச்சிட்ட கேக்கலாம்னு முடிவு பண்ணி அவட்ட கேட்டதுக்கும் அவளும் நல்ல டிரஸ் எடுக்கலாம்னு சொன்னா, சரி தம்பி , தங்கை எவ்வழியோ யாமும் அவ்வழி,மறுபடியும் என்னுடைய தம்பிக்கு போன் பண்ணி, டேய் உன்னோட அக்கௌன்ட்ல பணம் போடுறேன் அப்பா அம்மாக்கு நல்ல ஒரு பட்டு சேலையும் அப்பாக்கு ஒரு காட்டன் வெட்டி சட்டையும் எடுன்னு சொல்லி அமௌண்ட போட்டு விட்டேன்.

நம்ம தம்பி பேஷன் டெக் படிக்கிறார், அதுனால கொஞ்சம் டிரஸ் நல்ல எடுப்பார், பல நேரத்துல அவன் கூடதான் நான் எனக்கு டிரஸ் எடுக்க போவேன்.தம்பியும் ஊருக்கு போய் நல்ல ஒரு பட்டு சேலையும், காட்டன் வெட்டி சடையும் எடுத்து கிப்ட் பார்சல் பண்ணி அவனோட நண்பர் வீட்ல வச்சிட்டு வந்துட்டார், நானும் அப்பாடி ஒரு வழியா வேல முடிஞ்சிதுன்னு சந்தோசமா இருந்தேன், அப்டி நினைச்சிட்டு இருக்கும் போதே தம்பிட்ட இருந்து கால் (என்ன ஒரு டெலிபதி) அண்ணா இன்னைக்கு நான் உடனே காலேஜ் கிளம்புறேன் ஒரு பிரக்டிகல் நோட் பெண்டிங் இருக்கு அது நான் சிக்ன் வாங்க போறேன்னு சொள்லிட்டு கிளம்பிட்டான்.

அட இது என்ன டா புது சோதனை. சரின்னு அவனோட பிரண்ட் நம்பர் வங்கி அந்த கிப்ட் பார்சல எங்க பக்கத்து  வீட்டு மாமாட குடுக்க சொல்லி, அவர்ட நடந்த கதைய விளாவரியா சொல்லி, மாமா இத தயவு செய்து எங்க அப்பா அம்மாட்ட சண்டே மறக்காம குடுதுருங்கனு சொல்லி அவரும் சரின்னு சொல்லிட்டார். ஒரு வழியா எல்லாம் சரின்னு ஞாயிற்று கிழமைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

ஒரு வழியா ஞாயிற்று கிழமை அன்னிக்கு அந்த மாமா கலைலையே கிப்ட் குடுத்துட்டு போன் பண்ணி, தம்பி கிப்ட்டஅப்பா அம்மாட்ட குடுத்துட்டேன், சந்தொசமான்னு கேட்டார்...நானும் ரொம்ப தேங்க்ஸ் மாமானு  சொல்லிட்டு, என்னோட தம்பியையும் ,தங்கையும் கான்பாரன்ஸ் கால்ல எடுத்து எங்க அப்பா அம்மாக்கு போன் பண்ணி வாழ்த்துகள சொன்னோம். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப சந்தோசம் எங்களுக்கும் தான், இந்த சந்தோசத்த உங்க கூடயும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மீண்டும் மகிழ்ச்சி.


இது இரண்டாவது சந்தோசம், பாரதியார் பிறந்த நாள், அன்றுதான் என்னுடைய அப்பா அம்மாவின் திருமண நாளும், எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு கவிஞர் பாரதியார் மட்டுமே. குறிப்பாக நான் மேல் நிலை முதல் ஆண்டு தேர்விற்கு முந்தைய தினம் கடுமையான உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தேன், அப்போது உற்ற துணையாக இருந்தது பாரதியாரின் கவிதை வரிகளே,  காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன் என்ற வரிகளை மனதில் நினைத்து அத்தனை தேர்வுக்கும் சென்று வந்தேன்,வென்றும் வந்தேன், ஆதலால் பாரதியாரின் பிறந்த நாள் எனக்கு மிகவும் சந்தோஷமான நாள்.
எனக்கு மிகவும் பிடித்த மற்றுமோர் கவிதை  உங்களுக்காக
தேடிச் சோறு நிதந்தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?



இது மூன்றாவது சந்தோசம், வேற யாருங்க நம்ம தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான்,இங்க குஜராத்ல அனைத்து FM சானலும் ரஜினி பத்தி அலறுதுங்க அவரு பிறந்த நாளுக்காக, நான் வாழ்த்து சொல்லலேனா எப்படி??? மேலும் எனக்கு பிரபலங்களை பிடிப்பது அவர்களுடைய வாழ்வு முறைகளை பொறுத்தே, அந்த வகையில்  எனக்கு மிகவும் பிடித்தவர்கள் ரஜினி, அஜித் , சச்சின், கவுண்ட மணி, கங்குலி அதில் ஒருவர் திரு.ரஜினிகாந்த் அவர்கள். ரஜினியை பற்றி நிறைய பேருக்கு மாற்று கருத்துக்கள் இருந்தாலும் எனக்கு தலைவர ரொம்ப பிடிக்கும், நான் பார்த்த முதல் திரைபடம் தளபதி அதுனால கூட தலைவர பிடிக்கலாமோ என்னவோ??. என்ன இருந்தாலும்
தலைவர் தலைவர் தான். தலைவா பிறந்த நாள் வாழ்த்துக்கள். லேட்டா சொன்னாலும் கொஞ்சம் லேட்டஸ்ட் பாஸ்.
நேசமுடன்,
ருத்ரா


Udanz

12 comments:

Bala said...

உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது அதில் இழையோடும் ஒரு மெல்லிய சந்தோசத்தை உணர முடிகிறது. உங்களுக்கு நல்ல எழுத்துத்திறமை இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்

கோகுல் said...

நெகிழ்வான தருணம்,
நல்ல புதல்வனாக இருக்கீங்க!

வாழ்த்துகள்,
கொஞ்சம் பிழைகள் வருது கவனம் கொள்ளுங்க,மற்றபடி சுவாரஸ்யமான எழுத்துநடை.தொடருங்க.

paramasiva anand said...

மாப்ள உன்னோட பதிவுகளில் நல்ல எழுத்து கோர்வையும் எழிய வடிவாவும் இருக்கு வாழ்த்துகள் மாப்ள , நானும் லேட்டஸ்ட் ஆ ஒன்னு சொல்றேன் அப்பா அம்மாவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துகள்....... அன்புடன் ஆனந்த , விசு

சக்தி கல்வி மையம் said...

மூன்றாவது சந்தோஷம் குஜராத்திலுமா?

Ruthra said...

அன்புள்ள முகிலுக்கு

மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

நேசமுடன்
ருத்ரா

Ruthra said...

அன்புள்ள கோகுல்,

மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் பத்து வருடங்களுக்கு பிறகு தமிழில் எழுதுவதால் எழுத்து பிழைகள் அதிகம் வருகின்றது, இன்னும் கூடிய சீக்கிரம் திருத்தி கொள்கிறேன்.

நேசமுடன்
ருத்ரா

Ruthra said...

அன்புள்ள ஆனந்த்,விசு,

மிக்க நன்றி, தொடர்ந்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

நேசமுடன்
ருத்ரா

Ruthra said...

அன்புள்ள கருண்,

நீங்க வேற நம்ம ஊர்ல ஒரு நாளோட விட்ருபாங்க, இங்க மூனு நாள் எல்லா F M லையும் ரஜினி ரஜினி ரஜினி தான்.

நேசமுடன்
ருத்ரா

ராஜ் said...

பாஸ்,
அப்பா அம்மாவுக்கு என் சார்பாக "திருமண நாள்" வாழ்த்துகளை சொல்லிடுங்க.....

Ruthra said...

ராஜ், கண்டிப்பா பாஸ்

நேசமுடன்

ருத்ரா

வெளங்காதவன்™ said...

எலேய் அப்பு...

உம்பட போஸ்ட் எதுவும் எனிக்கு அப்டேட் ஆவறது இல்ல....

எப்பவாச்சும் வந்து படிக்குதேன்....

#அப்புடியே குஜராத் கில்மா பத்திப் போடுய்யா!!!!

:-)

Ruthra said...

யோவ்,குஜராத்ல கில்மாவா????...

ராசா, இப்பதான் ஆரம்பிச்சுருக்கேன் அதுக்குள்ளயா. கொஞ்சம் பொறு அப்பு...

போக போக போடலாம் .

நேசமுடன்,

ருத்ரா

Post a Comment