Thursday, December 8, 2011

இந்தியால இருந்து ஜப்பான் வரை

 நேத்து கஷ்டப்பட்டு ஒரு பதிவ போட்டு அதுக்கு எதுவும் கமெண்ட்ஸ் நேத்து நைட் வர வரல. சரி நம்ம அரசியல் கட்டுரை எழுதுறது யாருக்கும் பிடிக்கல, வேற எதாவது வித்தியாசமா பதிவு போடலாம்னு நேத்து நைட் வரை யோசிச்சி யோசிச்சி ஒன்னும் புடி படல. கடைசியா நமக்கு தெரிஞ்ச மற்றும் நம்ம செஞ்ச பயணங்களை பத்தி ஒரு பதிவ போட்டு விடுவோம்னு முடிவு பண்ணப்போ மணி டங்குன்னு ஒன்னு அடிக்குது, சரி இதுக்கு மேல லேப்டாப்ப ஓபன் பண்ண விடுஞ்சிரும்.அதுனால நாளைக்கு பதிவ போடலாம்னு முடிவு பண்ணி தூங்கிட்டேன்.

எனக்கு தெரிஞ்சவரை தமிழ்ல பயணங்கள் பற்றி இதுவரை யாரும் அதிகமா எழுதலன்னு நினைக்கிறன். அப்படி எதாவது கட்டுரைகள் இருந்த தோழர்கள் லிங்க் குடுங்க. சரி இனிமே என்னோட பதிவுகள் பயணங்கள் பத்தி அதிகமிருக்கும்.

காலைல ஆபீஸ் வந்திட்டு இருக்கும் பொது மொபைல் அலறுனுது. என்னமோ ஏதோனு பார்த்த சரக்குக்கு சாவு மணி கட்டுரைக்கு ஒரு கமெண்ட் வந்துருக்குனு ஒரு மெயில் , உடனே நமக்கு அந்த கம்மெண்ட பார்த்து ஆகணுமே, ஆட்டோ டிரைவர கொஞ்சம் வேகமா போக சொன்னேன்.

ஆபீஸ் வந்ததும் அடிச்சி பிடிச்சி சிஸ்டம ஓபன் பண்ணா நம்ம தோழர் ராஜா கமெண்ட் போட்டுருந்தார், ஓகே ஒரு கமெண்ட் வந்துருச்சு அதுக்கு reply  பண்ணிட்டு எப்படி பயண கட்டுரைய ஆரம்பிக்கலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அப்பா நம்ம கை சும்மா இருக்கமா switch to new blogger அப்டின்னு ஒரு லிங்க் இருந்துது அத சரியாய் குட படிக்காம கிளிக் பண்ணி தொலச்சிட்டேன். அது என்னனமோ காட்டுது. ஒன்னு ஒன்னா பாத்துட்டு வரும்போது stats அப்டின்னு ஒரு லிங்க் இருந்துது, அதையும் கிளிக் பண்ணேன், அத பார்த்து அப்டியே நான் ஷாக் ஆயிட்டேன்.

என்ன ஷாக்னா, நம்ம பதிவ கிட்ட தட்ட ஒரு 300  தடவ view  பண்ணிருகாங்க (படிச்சதுக்கு அப்புறம் ஏன்டா வந்தோம்னு நினைச்சு இருப்பாங்க ) நம்ம மகா ஜனங்கள். இதற்கு காரணமான அனைத்து நல் உள்ளங்களையும் முக்கியமாக அன்பழகன் வீரப்பன், சரவணன் சவடமுத்து , ராஜா , M .R , வேடந்தாங்கல், இன்டலி , பிரபாகரன் ஆகியோர்ட்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


 தோழர்கள் அன்பழகன் வீரப்பன் மற்றும்  சரவணன் சவடமுத்து அவர்களை கொஞ்சம் கஷ்டபடுதிவிட்டேன் அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்கிறேன். இவர்கள் இருவரும் தங்களுடைய முக புத்தகத்தில் நம்முடைய சரக்குக்கு சாவு மணி லிங்கை பகிர்ந்தவுடன் தான்  இந்தியா முதல் ஜப்பான் வரை, ipad ல இருந்து விண்டோஸ் மூலம் மக்கள் சாரா சாராய வந்து பார்த்துட்டு போயிருகாங்க. 


இத பார்த்ததும் பயமும் பதற்றமாவும் இருக்கு, இனிமே கொஞ்சம் நல்லா எழுதணும் இல்ல இல்ல நிறையவே நல்லா எழுதனும்னு தோணுது, இது போல என்றும் உங்கள் தொடர் ஆதரவை வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.


 
இதுக்கு மேல ஒரு பயங்கர ஷாக் என்னன்னா, இந்த சந்தோசத்துல திக்கு முக்காடிகிட்டு இருக்கும் பொது திடீர்னு ப்ளோக்க ஓபன் பண்ணா followers  ஜீரோ அப்டின்னு காமிக்குது, இது என்ன டா பேஜாரா போச்சு, இந்த ஆண்டவன் கொஞ்சம் கூட ஒரு மனுசன நிம்மதியா இருக்க விட மாற்றான். பின்ன என்னங்க  கொஞ்சம் கஷ்டப்பட்டு ஒரு 14 followers பிக் அப் பண்ணி  வச்சுருந்தேன், இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணனும்.

மேலும் நண்பர்கட்கு இது எதாவது தொழில் நுட்ப கொளராக இருந்தால் இதை எப்படி சரி செய்வது என்று கொஞ்சம் விளக்கவும் ஏன் என்றால் மறுபடியும் நண்பர்களிடம் போய் follow பண்ணுங்க join பண்ணுங்க அப்டின்னு சொல்றதுக்கு வெட்கமா இருக்கு.

நேசமுடன்
ருத்ரா
Udanz

10 comments:

viswanathanchidambareswaran said...

ஆரம்பிச்சுடல இனி கலக்கல் தான்...பணி இனிதே தொடரட்டும்

Ruthra said...

viswanathanchidambareswaran said...ஆரம்பிச்சுடல இனி கலக்கல் தான்...பணி இனிதே தொடரட்டும்///

தங்கள் அன்புக்கு நன்றிகள் கோடி ,

தொடர் ஆதரவு வேண்டும் ருத்ரா

ராஜ் said...

பாஸ்,
இந்த பதிவ படிச்சா நீங்க படிக்கிறவர் கூட பேசுற மாதிரி இருக்கு... நல்ல எழுத்து நடை...பதிவ நிறைய பேர் படிக்க கொஞ்சம் டிப்ஸ் தாரேன்:
௧) http://tamilmanam.net/ அப்படின்னு ஒரு சைட் இருக்கு...பதிவுகளின் திரட்டி அது.. அங்க போய் பதிவுப்பட்டையை (toolbar) இந்த லிங்க்ல இருந்து http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html டவுன்லோட் பண்ணிகாங்க...
தமிழ்மணத்துல இணைச்சா நிறைய பேர் வர வாய்ப்பு உள்ளது....

ராஜ் said...

அப்புறம் என் பேரு ராஜ் .....ராஜா இல்லேங்க/.... :)

ராஜ் said...

http://www.udanz.com/ கூட நல்ல திரட்டி....

ராஜ் said...

தமிழ் எதுல டைப் பண்ணுறேங்கனு தெரியல......இந்த கூகிள் டூல் ரொம்ப ஈசியா இருக்கும்....Note Pad la கூட டைப் பண்ணலாம்...
http://www.google.com/ime/transliteration/ ..
இது தான் Use பன்னுறேங்க்னா ஓகே.....எனக்கு தெரஞ்சத சொனனே... :)

Philosophy Prabhakaran said...

நானே சொல்லணும்ன்னு நினைச்சேன்... நேற்று பதிவுலக பஞ்சாயத்து என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் உண்மைத்தமிழன்... அதாங்க சரவணன் சவடமுத்து உங்க பதிவின் லிங்கை பஸ்ஸில் பகிர்ந்திருந்தார்... ஒரு புதிய பதிவருக்கு இப்படியொரு விளம்பரம் கிடைப்பது சாதாரண விஷயம் அல்ல...

Philosophy Prabhakaran said...

நீங்க ப்ளாக் எழுத ஆரம்பிக்கிறதுக்கு நானும் காரணம்ன்னு சொல்லியிருந்தீங்க... இவனெல்லாம் பதிவெழுதுறான் நாம எழுதினா என்னன்னு தானே நினைச்சீங்க...

Ruthra said...

ராஜ் தங்கள் கருத்துக்கு நன்றி, google மூலமாகதான் தமிழ் type பன்றேன்

udanz ல பதிவு பண்ணிட்டேன்

ருத்ரா

Ruthra said...

Philosophy Prabhakaran

மிக்க நன்றி, இல்லங்க உங்க ப்ளாக் படிச்சு முடிச்சவுடன் நம்மளும் ப்ளாக் ஆரம்பிக்கணும்னு முடிவு பண்ணுனேன் அனால் அது ஏன்னு தெரியல.


ருத்ரா

Post a Comment