Wednesday, December 7, 2011

சரக்குக்கு சாவு மணி

என்னங்க தலைப்ப பார்த்து பயபடாதீங்க, தமிழ் நாட்ல இல்ல இங்க குஜராத்ல. அதுக்கு முன்னால எல்லாரும் டாஸ்மாக் பத்தி எழுதிட்டாங்க நீயுமா அப்டின்னு நீங்க கேக்குறது எனக்கு நல்லாவே புரியுது. ஆனால் இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசம். என்ன என்பதை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மது விலக்கு அமுலில் இருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் குஜராத் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால் இங்கே சரக்கு கிடைக்குமா என்றால் எவ்ளவு வேண்டுமானாலும் கிடைக்கும் ஆனால் காசுதான் கொஞ்சம் அதிகம் (காசு கொஞ்சம் அதிகமா குடுத்தா இந்தியால எது வேணும்னாலும் கிடைக்கும்??!!). குஜராத்தின் அண்டை மாநிலமான பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான்ல இருந்து அள்ளிகிட்டு வந்துறாங்க நம்ம மக்கள். ஒரு ஒய்ன் ஷாப் குடிசை தொழில் மாதிரி ஊருக்கு ஒதுக்குபுறமா நடக்குது. அப்புறமா சட்ட விரோதமா நம்ம மக்கள் அவங்களே கள்ள சாராயம் காய்ச்சி சப்ளை பன்றாங்க. 10 ரூபாய்க்கு ஒரு பாகெட் கிடைக்குது, இது மட்டும் இல்லாம பக்கத்துக்கு வீட்ல உள்ளவன் எவனாவது வெளியூருக்கு போறன்னு சொல்லிட்டா அவன் தொலஞ்சான். பக்கத்துக்கு வீட்டு மாமல இருந்து அபார்ட்மென்ட் வாட்ச்மன் வரை வரும்போது நமக்கு ஒரு புல் நமக்கு ஒரு ஹாப் அப்டின்னு உயிரை எடுதுருவாணுக, இப்படி ஒரு தடவ நான் டெல்லி போய்ட்டு வரும்போது, என்னோட பாஸ் கேட்டார்னு ஒரு புல் பாட்டில் வாங்கிட்டு வந்தேன். ரயில்வே ஸ்டேஷன்ல இறங்கி பார்த்த என்னமோ வெடிகுண்டு கொண்டு வர தீவீரவாதியா செக் பன்ற மாதிரி செக் பன்றாணுக.அத பார்த்து பயந்து நமக்கு வேர்த்து ஊத்தி. வந்த ரயில்ல மறுபடியும் ஏறி அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி வீட்டுக்கு வந்து சேர்த்தது எல்லாம் தனி கதை.

சரி இதெல்லாம் நீ இப்ப எதுக்கு தேவை இல்லாம சொலிட்டு இருக்கா??? அட பொறுமையா கேளுங்க, இங்க (குஜராத்)புதுசா ஒரு சட்டம் போட்ருகாங்க, அது என்னானா இங்க சரக்கு வித்தலோ இல்ல சரக்கு காய்ச்சினலோ மரண தண்டனை, அதாங்க படத்துல வக்கீலுங்க கடைசியா ஒரு டயலாக் சொல்லுவங்கள்ள கணம் கோர்ட்டார் அவர்களே இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை விதிக்க வேண்டுகிறேன். என்னா ஒரு வில்லத்தனம்.




ஏன் இந்த கொலைவெறி சட்டம்னு நம்ம தமிழ் மக்கள் நினைக்கலாம் ஆனா பயப்பட வேண்டாம் நம்ம தமிழ் நாட்ல இப்படி ஒரு சட்டம் வராது வரவும் விடமாட்டோம், பின்ன நம்ம தமிழ் நாடே டாஸ்மாக் வருமானத்த வச்சி தான ஓடுது,ஒரு கணக்கீட்டின் படி, நானுறுக்கும் மேற்பட்ட மக்கள் 1977 மற்றும் 1990 இடையே குஜராத்தில் சட்டவிரோதமாக கள்ள சாராயம் அடித்து விட்டு இறந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் இதை விட அதிகம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை கேள்வி பட்ட நம்ம அண்ணன் சாராய சக்கரவர்த்தி விஜய் மல்லையா அவர்கள் மோடிக்கு ஒரு யோசனை சொன்னாரு குஜராத்ல மக்கள் சரக்கு அடிக்க முடியாம ரொம்ப கஷ்டபடுறாங்க அதுனால நீங்க மது விலக்க ஒழிக்கணும் அப்டின்னு சொன்னாரு, இத கேள்வி பட்ட மோடி மல்லயவா கிழி கிழின்னு கிழிச்சு தொங்க விட்டாரு. அப்பதான் தலைவர் மோடி என்னா இது வம்பா போச்சு எல்லாரும் நமக்கு யோசனை சொல்ல ஆரம்பிசிடாணுக. இது சரி பட்டு வராதுன்னு யோசிச்சி சாராயம் வித்தா சாவு அப்டின்னு ஒரு சட்டம் போடுறார்.


சட்டத்த போட்டு நம்ம கவர்னர் கமலாட்ட அனுப்புனார், அந்த அம்மா இதெல்லாம் எனக்கு தெரியாது, எதுக்கும் எங்க சோனியா அம்மாட்ட கேட்டு சொல்றேன்னு சொல்லி திருப்பி அனுபிசிட்டாங்க. மோடி விடாம கவர்ணர நச்சரிச்சு பெர்மிசன் வங்கி சட்டசபைல நிறைவேதிட்டாறு. இப்ப நான் என்னா சொல்ல வறேன்னா, மரண தண்டனை முற்றிலும் ஒழிக்க பட வேண்டும்னு பலர் போராடிகிட்டு இருக்குறாங்க. இந்த வேலைல இப்படி ஒரு சட்டம் தேவையா??? இத பத்தி நம்ம மோடிட்ட கேட்ட என்னா சொல்றார்னா தண்டனைகள் கடுமை ஆனாதா தப்புகள் குறையும்னு விவேக் ஒரு படத்துல சொல்வாரே அத மாதிரி சொல்றார்.


எனக்கு மரண தண்டனையை முற்றிலும் நீக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை என்றாலும் கூட, சாராயம் விற்பதற்கு எல்லாம் மரண தண்டனை என்பது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது, மேலும் தமிழ் நாடு, கேரளா, புதுவை, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சாராய ஆறு ஓடுகிறது ஒரிசால மன்னிக்கவும் இப்ப அது ஓடியவா??? ஓடியாள வீட்ல சாராயம் காய்ச்சி குடிக்குறாங்க.டெல்லி, பஞ்சாப், கோவா இதெல்லாம் கேக்கவே வேண்டாம். இப்படி இந்தியாவே சாராயத்துல ஓடும்போது இப்படி குஜராத் மக்களை மட்டும் வஞ்சிகிறது. கொஞ்சம் பாவமா இருக்கு.
(கொஞ்சம் சுய நலமும்தன், வெளியூர் போகும்போதுல்லாம் இந்த குடிமகன்கள் தொல்ல தாங்க முடியல, சரக்கு வாங்கிட்டு வர சொல்லி அவங்க நச்சரிப்பு இருக்கே. அப்பப்பா முடியல)

மேலும் ஒரு பெண்ணை அல்லது ஒரு சிறுமியை பாலியல் வக்கிரத்துக்கு உட்படுத்தும் ஒருவன் ஏலே வருடங்களும் சாராயம் விற்றால் மரணதண்டனை என்பதும் ஏனோ எனக்கு முரணாக தெரிகிறது இப்படி ஏகப்பட்ட முரண்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்,ஒரு ஊழல் வாதி கூட தண்டனை பெறுவது இல்லை, அப்படி பெற்றாலும் ஏகப்பட்ட ஓட்டைகள் வைத்து வெளியில் சுற்றுகிறான், அஸ்ஸாம்,நாகலாந்து,அருணாச்சல் பிரதேஷ், மேற்கு வங்காளத்தில் நடைபெறும் மாவோ தோழர்கள் போராட்டமாகட்டும், ஏனைய மக்கள்
போராட்டமாகட்டும் அனைத்திற்கும் இந்த முரண்களே கரணம், ஒட்டு வங்கி அரசியல்,கார்பரடே மோசடி என்று ஒட்டு மொத்தமாக இந்திய தேசம் ஊழல் தேசமாகி ஊழல் தேசியமாகி விடுவதற்கு முன்னால் ஒட்டு மொத்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்தும் தருணம் இது என்பது என்னுடைய கருத்து.

நேசமுடன்
ருத்ரா

பின் குறிப்பு:இந்த பதிவு எங்கோ ஆரம்பித்து எங்கோ சென்று விட்டது என்று நினைக்கிறன்.தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்

அண்ணன் கபில் சிபிலுக்கு இந்த பதிவால் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.


Udanz

2 comments:

ராஜ் said...

உண்மைதாங்க...காந்தி பிறந்த இடம் என்பதால் குஜராத்தில் மது விலக்கு அமலில் உள்ளது....ரொம்ப நாளைக்கு முந்தியே மது விலக்கு இருக்குனு நினைகிறேன்......
மோடி கள்ள சாராயம் வித்தா தான் தூக்குனு சொல்லறாரு...அது ஓகே தான்...
அப்புறம்... சுரத்தை பத்தி கொஞ்சம் எழுதுங்க....இப்போ ஏதோ குப்சுரத் அப்படின்னு ஒரு ப்ராஜெக்ட் பண்ணுறாரு கேள்விபட்டேன்..

Ruthra said...

வணக்கம், சூரத் பற்றி கூடிய சீக்கிரம் எழுதுகிறேன்.

ருத்ரா

Post a Comment