Tuesday, December 6, 2011

கபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்


கபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்

என்ன தலைப்ப பார்த்து பயபடாதீங்க, ரெண்டு நாளா நான் படுற அவஸ்தை இருக்கே சொல்லி மாளாது. தெரியாதனமா ப்ளாக் ஸ்டார்ட் பண்ணிட்டேன், அதுக்கடுத்து என்ன பன்றது தெரியல. முதல்ல நம்ம நண்பர்கள்ட்ட கேக்கலாம்னு நினைச்சேன். நம்ம நண்பர்கள் நம்மள நக்கல் பண்ணியே கொன்றுவாங்க, அதுனால கொஞ்சம் பொறுமையா சொல்லலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.சரி நம்மாள எதாவது ட்ரை பண்ணலாம்னு நினைச்சா தலயும் புரியல (தலய புரியுறது கொஞ்சம் கஷ்டம்தான்) வாலும் புரியல சரி நம்ம நண்பர்கள் ப்ளாக் ஒவ்வான தேடி பொய் படிச்சு அவங்க என்ன பன்னிருகாங்க பார்போம் அப்டின்னு ஒவ்வரு ப்ளோக பொய் செக் பண்ணி ஒரு வழியா தமிழ் மனம் , இன்டலி , தமிழ் 10 ல லிங்க் குடுத்தாச்சு, தமிழ் மனதை அறிமுகம் செய்த வலை பூ http://philosophyprabhakaran.blogspot.com அவர்கட்கு நன்றிகள். சரி எல்லா வலை திரட்டி ல போய் லிங்க் குடுத்தாச்சு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சா சரி நம்ம தமிழ் மக்கள் வலை பூ ஒவ்வொன்னா பொய் அப்டியே ஒரு கமெண்ட் போட்டு நம்ம ப்ளாக் லிங்க போஸ்ட் பண்ணிரலாம்னு அதையும் பண்ணியாச்சு, சரி இன்னும் எதாவது பண்ணனுமே ???? விடுவோமா, முக நுலில் ஒவ்வரு குழுமமா பொய் அங்கயும் ப்ளாக் லிங்க போஸ்ட் பண்ணியாச்சு. அத ஒருத்தனும் மதிக்கல என்பது வேற விஷயம் அட அது கூட பரவலா, பய புள்ளைங்க போஸ்ட் பண்ண அடுத்த செகண்ட் அந்த போஸ்ட டெலிட் பண்ணிட்டாங்க, பின்ன சம்மந்த சம்மந்த இல்லாம போஸ்ட் பண்ணா மடில வச்சி கொஞ்சவ செய்வாங்க. கடைசில கஷ்டப்பட்டு தமிழ் இன்டலி ல சரவணன் அப்டின்னு ஒருத்தர பிடிச்சி follow பண்ண வச்சாச்சு. அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல.யாரு பெத்த பிள்ளையோ நல்லா இருக்கட்டும் நம்பி வந்துட்டாரு. சரி ஒருத்தர் வந்துட்டாரு இனிமே அப்டியே பிக் அப் பண்ணிரலாம் அப்டின்னு நினைச்சு பார்த்த அதுக்குள்ள இன்னோர்த்தர் யாருன்னு பார்த்த நம்ம அண்ணன் சுரேஷ் குமார், அவர்கட்கும் கோடான கோடி நன்றிகள். சரி நம்ள நம்பி ரெண்டு பேரு வந்துட்டாங்க நம்ம வேற பயங்கர பில்ட் அப் விட்ருகோம், கொஞ்சம் கலை அறிவியல் கதை கட்டுரைன்னு அத நம்ம்பி வந்துருபன்களோ அப்டின்னு ஒரு சின்ன பயம். சரி நம்ம இன்னைக்கு எதாவது எழுதுவோம்னு நினைச்சு twitter ,facebook ஓபன் பண்ணா கபில் சிபல் பத்தி ஏகப்பட்ட போஸ்ட் அட என்னனு பார்த்தா இனிமே twiiter , facebook , blogger எல்லாத்தையும் சென்சார் பண்ண போறாங்கலாம். அட கொடுமையே நான் ப்ளாக் ஆரம்பிச்ச நேரத்திலா இப்டிலாம் நடக்கணும். என்ன பன்றது பேசாம நேர போய் ஹர்விந்தர் சிங்க பார்த்து கபில் சிபல்ட என்ன விசயம்னு கேட்க சொல்லணும், பின்ன என்ன கருத்து உரிமை கூட இந்த நாட்ல இல்லையா.இப்படி கேட்டதுக்கு அந்த ஆள் என்ன சொல்றார் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் (யாரு சோனியாவும் ராகுலுமா???) மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது அப்டிங்கிறார். என்னமோ போங்க நீங்க இப்படி சொல்றது தான் எங்களோட உணர்வுகள புன்ன்படுதுற மாதிரி இருக்கு. எனகென்னமோ இது சரியா படல. ஒரு வேல நம்ம பிரதமர் மன்மோகன் சிங்க், சோனியா ஜோக் மற்றும் கிராபிக்ஸ் படத்த பய புள்ளைங்க பார்த்துட்டாங்க போலுக்கு. இப்போதைக்கு நம்ம கபில் சிபல் facebook , google ரெண்டு கம்பனிக்கும் லெட்டர் போட்டு பேசுனதுக்கு facebook , google , உனக்கும் பெப்ப உங்க அப்பனுக்கும் பெப்பனுடாணுக. அதுனால இப்போதைக்கு என்ன வேணுமோ எழுதலாம். ஒன்னும் பிரச்சன இல்ல அப்டின்னு நினைச்சா அதுக்குள்ள நம்ம முல்லை பெரியார் அணை விவகராத்துல நம்ம கேரளா பய புள்ளைங்க சாமி சரணம் சொல்லிடு போய்கிட்டு இருந்தவங்கள புடிச்சி அடிசிருகாங்க. பாவம் நம்ம ஐயப்ப சாமிங்க கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சொன்னவங்க இப்போ உடம்பும் உயிரும் எனக்கு தேவை சொல்லிட்டு வராத ஒரு பட்சி சொல்லுது. ஒருவேள இததான் கப்பி சிபல் மன்னிக்கவும் கபில் சிபல் மத உணர்வ புன்படுதுறதா சொல்லி இருப்பாரோ. டவுட்டு. என்னமோ போங்க ஒருவழியா வச்ச தலைப்புக்கு ஏற்ற மாதிரி கட்டுரை எழுதியாச்சு இப்ப இத போஸ்ட் பண்ண போறேன். இதன் முலம் யாருடைய உணர்வுகள் புண்படுத்த பட்டிருந்தால் மன்னிக்கவும். எதுக்கும் ஒரு சேப்டி வேண்டாமா ???

நேசமுடன்
ருத்ரா
Udanz

11 comments:

சக்தி கல்வி மையம் said...

வாங்க., தலைவா.. என் பிலாகிர்க்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள்..லிங்க் வேற குடுத்து இருக்கீங்க.. பரவா இல்லையே பதிவுலக அரசியலை சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க.. சீக்கிரமே பிரபல பதிவர் ஆகா வாழ்த்துக்கள்..

சக்தி கல்வி மையம் said...

pls Remove word verification.

M.R said...

பரவாயில்லை ,ஆரம்பத்திலேயே அசத்தலாகத் தான் எழுதறீங்க ,வளர வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,

Anonymous said...

உங்க எழுத்து நடை நல்ல இருக்கு.. கலக்குங்க.. ஆனா படிக்க சிரமமா இருக்கு. வரிக்கு வரி கொஞ்சம் இடைவெளி இருந்தா படிக்க வசதியா இருக்கும்

Ruthra said...

M.R said.பரவாயில்லை ,ஆரம்பத்திலேயே அசத்தலாகத் தான் எழுதறீங்க ,வளர வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,///

வாழ்த்துகளுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை

ருத்ரா

Ruthra said...

எனக்கு பிடித்தவை said... உங்க எழுத்து நடை நல்ல இருக்கு.. கலக்குங்க.. ஆனா படிக்க சிரமமா இருக்கு. வரிக்கு வரி கொஞ்சம் இடைவெளி இருந்தா படிக்க வசதியா இருக்கும்////

வாழ்த்துகளுக்கு நன்றி.இனிமேல் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதுகிறேன் ..தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை

ருத்ரா

Ruthra said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...வாங்க., தலைவா.. என் பிலாகிர்க்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள்..லிங்க் வேற குடுத்து இருக்கீங்க.. பரவா இல்லையே பதிவுலக அரசியலை சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க.. சீக்கிரமே பிரபல பதிவர் ஆகா வாழ்த்துக்கள்..////

வாழ்த்துகளுக்கு நன்றி தலைவா ..தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை...

ருத்ரா

ராஜ் said...

பாஸ்,
ஒரு சின்ன ,Suggestion
எழுதும் போது கொஞ்சம் பார பாராவாக எழுதினால் படிக்க நன்றாக இருக்கும்.. இடையில் மானே தேனே மாதிரி ரெண்டு படங்களை போடுங்க பாஸ்..கண்ணனுக்கு குளுர்ச்சியாக இருக்கும்..

ராஜ் said...

http://bloggernanban.blogspot.com/

இந்த ப்ளாக் உங்களுக்கு உதவி புரியும் என்று நினைக்குறேன்..

M.R said...

நண்பர் கருன் சொன்னது போல வோர்ட் வெரிபிகேசன் எடுத்துடுங்க ,கருத்திடுபவர்கள் சிரமப் படாமல் இருக்க

Ruthra said...

ராஜா தங்கள் உதவிக்கு நன்றி, நீங்கள் குடுத்த link மிகவும் உபயோகமாக இருந்தது.

நண்பர்கள் கருண் M .R வேண்டுகோளுக்கு இணங்க word verification remove பண்ணியாச்சு.

ருத்ரா

Post a Comment